நடிகர்கள் சரத்குமார், விதார்த் இருவரும் தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் படங்கள் ஹிட்டாகின்றன. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகர்களாக வலம் வருகிறார்கள்.
இப்போது இருவரும் அறிமுக இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கும் ‘சமரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். படத்தில், எதிர்நாயகனாக மலையாள நடிகர் ஆர். நந்தா நடிக்கவிருக்கிறார். சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ஜார்ஜ், மலையாள நடிகர் சித்திக், கும்கி அஸ்வின் மற்றும் பலரும் நடிக்கின்றனர்.
ஒரு இராணுவ அதிகாரி, ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி என இருவரை சுற்றிச் சுழலும் அதிரடி சஸ்பென்ஸ் கதைக்களம். இராணுவ அதிகாரியும், ஐ ஏ எஸ் அதிகாரியும் ஒரு கிராமத்தில் மோசமான குற்றவாளிகள் குழுவால் பல அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தான சூழலை எதிர்த்துப் போராடும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. அதில் மணலியில் படமாக்கப்பட்ட ஆக்ஷன் அதிரடி காட்சிகள் படத்தின் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்கிற படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவித்துள்ளது.
உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு: M360° ஸ்டுடியோஸ் ரோஷ் குமார்
ஒளிப்பதிவு: குமார் ஸ்ரீதர்
இசை: வேத் சங்கர் சுகவனம்
கலை இயக்குநர்: ஸ்ரீமன் பாலாஜி
பாடல் வரிகள்: மணி அமுதன்
சண்டைப்பயிற்சி: விக்கி
காஸ்ட்யூமர்: எஸ். நாக சத்யா
தயாரிப்பு மேலாளர்: மணி தாமோதரன்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா