ராம் பொதினேனி, இயக்குநர் போயபதி ஸ்ரீனு கூட்டணியின் படத்துக்கு தலைப்பு ‘ஸ்கந்தா.’ வெளியானது மாஸான டைட்டில் கிளிம்ப்ஸ்!


நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி, இயக்குநர் போயபதி ஸ்ரீனு இணைந்துள்ள அதிகம் எதிர்பார்க்கப்படும் மாஸ் ஆக்‌ஷன் எண்டர்டெயினர் திரைப்படத்திற்கு BoyapatiRAPO என தற்காலிக பெயர் வைக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த படத்தின் பெயர் ‘ஸ்கந்தா’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் ராமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகவுள்ளது.
‘ஸ்கந்தா’ என்பது சுப்ரமணிய ஸ்வாமி தெய்வத்தின் மற்றொரு பெயர் எனவும், ‘தி அட்ராக்கர்’ என்ற டேக் லைன் கதாநாயகனது மூர்க்கமான குணத்தையும் குறிப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த டைட்டில் லோகோவில் முருகனின் ஆயுதமான வேலையும் இணைத்துள்ளனர்.

இந்த டைட்டில் கிளிம்ப்ஸில் நடிகர் ராம் மிகவும் மூர்க்கமாக கோவிலின் குளத்தில் இருந்து எழுந்து, ‘நீங்கள் வந்திருப்பது வீண். என் நுழைவு உங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும்’ என பேசிக் கொண்டே எதிரில் இருப்பவர்களை தாக்கும் வகையிலான மாஸ் சண்டைக்காட்சி காணப்படுகிறது.

ஸ்டன்ட் சிவா படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார். தமனின் இசை இந்த கிளிம்ஸூக்கு மேலும் மாஸ் கூட்டும் வகையில் அமைந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் சிறந்த தொழில்நுட்ப தரங்களுடன் மிகப் பெரிய பட்ஜெட்டில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் டிடேக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்கள். படத்தொகுப்பை தம்முராஜு கையாண்டுள்ளார்.

 

 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here