வினியோகஸ்தர்கள் சங்கத்தில் கலைஞரின் நினைவுநாள் அனுசரிப்பு; உதயநிதி ஸ்டாலின் துவங்கிவைத்த மருத்துவமுகாமில்  300க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை! 

இன்று தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுநாள் உலகம் முழுக்க பல தரப்பினராலும் அனுசரிக்கப்பட்டது. அந்தவகையில், சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சீபுரம் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம், அரிமா சங்கம் கோல்டு, அப்பல்லோ மருத்துவமனை, மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் சங்கத்தின் உறுப்பினர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக்காகவும் நடைபெற்ற மருத்துவ முகாமை திரைப்பட நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கிவைத்து உரையாற்றினார்.

நிகழ்வில் அறநிலையதுறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்
வீட்டுவசதி வாரிய தலைவரும், நடிகர் சங்கத்தின் துணை தலைவருமான பூச்சி முருகன் , வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், கவுன்சிலர்கள் சிற்றரசு, மதன்மோகன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சங்கத்தின் தலைவர் கே.ராஜன் தலைமை வகிக்க, பொருளாளர் பி.முரளி, துணைத்தலைவர் நந்தகோபால், இணைச்செயலாளர் சாய் என்கிற சாய்பாபா மூவரும் முன்னிலை வகிக்க. செயலாளர் காளியப்பன் நன்றி கூறினார்.

300க்கும் மேற்பட்டோர் மருத்துவ முகாமில் சிகிச்சை எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here