காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் ஆக்சன் திரைப்படம் ஒன்று உருவாகிறது. நடிகர் விஜய்காந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்க, யு அன்பு இயக்கவிருக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் துவங்கியது. நிகழ்வில் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
படத்தின் தலைப்பு வரும் ஆடி 18 -ம்தேதி ஆடிப் பெருக்கு பண்டிகை தினத்தில் வெளியாகவுள்ளது.
பரபரப்பான திருப்பங்களுடன், முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் படைப்பாக உருவாகிறது.
‘மதுரை வீரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடிக்கவுள்ளனர். மேலும் சில பிரபல நடிகர், நடிகைகளும் நடிக்கவிருக்கின்றனர். ‘வால்டர், ‘ரேக்ளா’ படங்களை இயக்கிய பட இயக்குநர் யூ. அன்பு கதைக்கு, ‘நட்பே துணை’ இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதையமைத்து வசனம் எழுதியுள்ளார்.
கேரள காடுகளில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஒரிசா, தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
ஒளிப்பதிவு – எஸ் ஆர் சதீஷ்குமார்
படத்தொகுப்பு – இளையராஜா
ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ
கலை இயக்கம் – பி. ராஜு
ஸ்டில்ஸ் – சக்திபிரியன்
பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்
மக்கள் தொடர்பு – சதீஸ், சிவா AIM