மலையாளத்தில் அறிமுகமான ஸ்ரிதா சிவதாஸ் தமிழில் சந்தானத்துடன் ‘தில்லுக்கு துட்டு 2′ படத்தில் நடித்தபின் தமிழ்ப் படங்களில் பிஸியானார்.
நரேனுடன் ஒரு படம், தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள மற்றொரு படம் என தொடர்ச்சியாக நடித்து அந்த படங்கள் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
வழக்கமான நாயகியாக இல்லாமல் நடிப்பதற்கு முக்கியத்துவமுள்ள வேடங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரிதா சிவதாஸின் புதிய படங்கள் பற்றி விரைவில் அறிவிப்புகள் வரவிருக்கின்றன.