மனதைக் கிறங்கடிக்கும் ஸ்ரீகாந்த் கேவிபி’யின் ‘நீங்குவதாலே’ ஆல்பம் பாடல்!

சுயாதீன இசைக் கலைஞர்கள் (Independent Musician) தங்கள் திறமையை வெளிப்படுத்த பல்வேறு களங்கள் உருவாகியிருக்கின்றன. அவற்றை சரியாகப் பயன்படுத்துபவர்களுக்கு பெரியளவில் வரவேற்பும் அடையாளமும் அடுத்தகட்ட வளர்ச்சியும் சாத்தியமாகிறது.

அந்த வகையில் சுயாதீன இசைக் கலைஞரான ஸ்ரீகாந்த் கேவிபி தனது தனியிசைப் பாடல்கள் (Independent Album Songs) மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே 3 பாடல்களை வெளியிட்டுள்ள அவரது 4-வது பாடல் இப்போது வெளியாகியுள்ளது.

‘நீங்குவதாலே’ என தொடங்கும் அந்த பாடல், இளைஞன் ஒருவனின் கடந்த கால காதல் நினைவுகளை அசைபோடுவது போல் உருவாகியுள்ளது. மனதை வருடி தாலாட்டுவது போன்ற பாடலின் இசை கிறங்கடிக்கிறது. பாடலின் காட்சிகள் ஒருவித கனவுலகுக்குள் நம்மை இழுத்துச் செல்வது போன்ற உணர்வைத் தருகிறது.

ரசிகர்களிடம் உற்சாகமான வரவேற்பை குவித்து வரும் நீங்குவதாலே பாடல் பற்றி ஸ்ரீகாந்த் கேவிபி’யிடம் கேட்டபோது, ‘‘இது என்னுடைய நான்காவது சிங்கிள். கடந்த மார்ச் மாதம் ‘ஐமேக் நீ’ என்ற பாடலை வெளியிட்டிருந்தேன். ரசிகர்களின் ஆதரவு குவிந்தது. அதற்கு முன் வந்த இரண்டு பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விதமாக தனித்துவமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கி வருகிறேன். இந்த பாடலை பத்மஜா ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார். எனது நான்கு பாடல்களில் முழு பாடலையும் பெண் பாடகர் பாடியிருப்பது இது முதல் முறை.

பாடலுக்கான விஷுவல்ஸ் அதாவது காட்சிகள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என யோசித்து உருவாக்கியிருக்கிறோம். எங்களை நாங்கள் திரும்பிப் பார்க்கும்போது குவாலிடி இம்ப்ரூம்மென்ட் விஷயத்தில் முந்தைய பாடல்களை விட இப்போது வந்துள்ள பாடலை பல விதங்களில் மெருகேற்றியிருப்பதை உணர்கிறோம். அந்த தரத்தை எதிர்காலத்திலும் தொடர்வோம்.

இந்த பாடல் ஒவ்வொருவரையும் அவர்களின் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்க வைக்கும். காரணம், எல்லோருமே அப்படியான ஒரு அனுபவத்தை கடந்துதான் வந்திருப்பார்கள். அதனால், எல்லோரையும் ஏதோவொரு விதத்தில் இந்த பாடல் இணைக்கும். அதுதான் நீங்குவதாலே பாடலின் ஸ்பெஷல் என்று நானும் என் டீமும் நினைக்கிறோம்.

சினிமாவுக்கு இசையமைக்க வேண்டும் என்பது எனது கனவு. அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன். அதேநேரம் ஆல்பம் பாடல்களை வெவ்வேறு ஜானரில் உருவாக்குவதும் வெளியிடுவதும் தொடரும்” என்றார்.

பாடலின் லிங்க்:- https://youtu.be/VVUgUS99tmc

பின்தொடர:
Twitter @sribkanth
Facebook https://www.facebook.com/srikanth.music/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here