‘கொலை’ படத்தின் நடிப்புக்காக குவியும் பாராட்டு… உற்சாகத்தில் சித்தார்த்தா சங்கர்!

சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சித்தார்த்தா சங்கருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஒரு கலைஞனுக்கான உற்சாகம் என்பது விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களின் ஆத்மார்த்தமான பாராட்டுக்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக, திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகள் கொண்ட சித்தார்த்தா சங்கர் போன்ற நடிகருக்கு இத்தகைய பாராட்டுகள் விலைமதிப்பற்ற பரிசு!

‘சைத்தான்’ மற்றும் ’ஐங்கரன்’ போன்ற படங்களில் தனது நடிப்பு திறமைக்காக பலரது பாராட்டுகளைப் பெற்ற இவர், ‘கொலை’ படத்தில் நடித்ததற்காகவும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். படத்தில் அவரது சரியான உடல் மொழி, உணர்வுகளின் வெளிப்பாடு மற்றும் தமிழில் மொழியில் அவரது திறமை போன்றவையும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

பாராட்டுக்களால் உற்சாகமடைந்துள்ள சித்தார்த்தா சங்கர் பேசும்போது, “தன்னுடைய ரசிகர்களிடம் இருந்து நிபந்தனையற்ற அன்பும் ஆதரவுமே ஒவ்வொரு நடிகரும் எதிர்பார்க்கிறார்கள். அந்த அன்பை ‘கொலை’ படத்தில் என்னுடைய நடிப்பிற்காக கொடுத்ததற்கு நன்றி. எனது திறனை நிலைநிறுத்திக் கொள்ள இந்தப் படம் எனக்கு மகத்தான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி.

எனது நடிப்பை குறிப்பிட்டுப் பாராட்டிய விமர்சகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி. இத்தகைய பாராட்டும் ஆதரவும் அடுத்து தேர்ந்தெடுக்கும் படங்களில் இன்னும் சிறந்த நடிப்பைத் தரக்கூடிய பொறுப்பைக் கொடுத்துள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here