சென்னை அயனாவரம் சோலையம்மன் கோயிலின் ஆடித் திருவிழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. அணியின் மாநிலத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் பக்தர்களுக்கு வழங்கிய அன்னதானம்!

சென்னை ஆகஸ்ட் 6; 2022: சென்னை அயனாவரம் அருள்மிகு சோலையம்மன் திருக்கோயிலில் வருடந்தோறும் ஆடித்திருவிழா மிகமிக பிரமாண்டமாக ஒருவார காலம் நடைபெறுவது வழக்கம்.

இந்த வருடமும் அப்படி சிறப்பாக நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. அணியின் மாநிலத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சோலையம்மனை தரிசித்து பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி மகிழ்வித்தார்.

மட்டுமல்லாது, கோயிலின் அருகிலுள்ள அம்பேத்கர் பொதுநல மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார்.

பின்னர், கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாளர் எஸ். ரஞ்சித்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற (சந்தர் வழங்கும் ‘தென்றல் சுருதி’) இன்னிசைக் கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார்.

நிகழ்வில் ஒருவர் அம்பேத்கர் வேடமிட்டு தோன்ற, அம்பேத்கரின் சிறப்புகளை எடுத்துச் சொல்லும் பாடல் பாடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டு பெற்றது!

இந்த இனிய நிகழ்வில் மாநிலச் செயலாளர் அயன்புரம் K.சரவணன், S.M.காமேஷ், டாக்டர்.உமாபாலன், ஆ.ச.பிரதாபன், M.பாரதிதாசன், K.முத்துமாரி மேஸ்திரி, P.பார்த்திபன் (MRF), வழக்கறிஞர் R.N.கார்த்திகேயன், T.பழனி, ஆ.ச.அன்பழகன், அயன்புரம் வீர.ரவிக்குமார், புரட்சி தே.அசோக், G.V.மணிவண்ணன் (ICF), M.முனுசாமி, பூவை R.சரவணன், தலித் K.ஜானி K.யோகேஸ்வரன் (ICF) புரசை A.வெங்கடேசன் வழக்கறிஞர் G.விஜயகுமார் M.ஸ்ரீதர், D.கோகுல்,N.வெங்கட்ரமான், S.கார்த்திகேயன் (PWD), P.பிரவீன் C.சோலைராஜ் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக K.கார்த்திக், S.ஆலின்சித்தார்த்தன், N.ரஞ்சித் ஆகியோர் செயல்பட்டு விழா சிறப்புற முழு ஒத்துழைப்பு தந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here