பல்வேறு கதைக்களங்களை உருவாக்கி 20-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கிய அனுபவத்துடன், திரைப்படங்களிலும் முத்திரை பதிக்க தயாராகியிருக்கிறார் ஸ்ரீராம்.
திரைப்படக்கல்லூரி மாணவரான அவர் இயக்கிய ‘ருசி கண்ட பூனை’ என்ற குறும்படம் 20 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்து வெற்றி பெற்று பரிசுகள் பலவற்றை வென்றுள்ளது.
சமீபத்தில் இவர் இயக்கிய ‘சாயுபும் நானும்’ எனும் குறும்படத்தை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும் ஐ எஃப் ஏ நிறுவனமும் இணைந்து தயாரித்தன. அந்த படம் பெங்களுரு உலக திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த ஒளிப்பதிவிற்கான பரிசைப் பெற்றது. பரிசினை மத்திய தகவல் ஒளிப்பரப்பு துறை இணை அமைச்சர் எல் முருகன், இயக்குநர் ஸ்ரீராம் மற்றும் ஒளிப்பதிவாளர் நிரன் சந்தரிடம் வழங்கி ஊக்குவித்தார்.
மட்டுமல்லாது, ‘சாயுபும் நானும்’ குறும்படம் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் மூலம் கேன்ஸ் பட விழாவுக்கு அனுப்பப்பட்டது.
குறும்படங்களை இயக்குவதோடு இதுவரை பல்வேறு சிறுகதைகளையும் எழுதியுள்ள ஸ்ரீராம், ‘465′ என்ற படத்திற்கு வசனமும் எழுதியுள்ளார்.
அதையடுத்து ‘டூ’ படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமானார். இப்போது தனது இரண்டாவது படத்திற்கான கதையை பிரபல தயாரிப்பாளரிடம் சொல்லி, படம் இயக்குவதற்கான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.