கலைஞர் டிவியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு, கார்த்தி நடிப்பில் உருவான ‘சர்தார்’ சூப்பர்ஹிட் அதிரடி திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.
இரும்புத்திரை, ஹீரோ படங்களைத் தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்த படத்தில் உளவுத்துறை அதிகாரி, போலீஸ் அதிகாரி என கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.
கார்த்திக் ஜோடியாக ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை லைலா, சங்கி பாண்டே, முனிஸ் காந்த், யூகி சேது உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
உளவாளியின் வாழ்க்கை, தண்ணீர் மாஃபியா என இரண்டு வித்தியாசமான கதைக்களத்தோடு விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.