நடிகை, எழுத்தாளர், வசனகர்த்தா… சுற்றிச் சுழலும் சாந்தி பாலச்சந்திரன்!

அமேசான் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான வெப் சீரிஸ் ‘ஸ்வீட் காரம் காபி.’ அதில் நிவி கதாபாத்திரத்தில் தேர்ந்த நடிப்பால் கவனம் ஈர்த்தவர் சாந்தி பாலச்சந்திரன்.

இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் திரைப்படமான ’ஜல்லிக்கட்’டில் சோஃபியாக அவரது நடிப்பு மறக்க முடியாததாக இருந்தது. அப்படிப்பட்ட நடிப்பால் வித்தியாசமான மற்றும் சவாலான பாத்திரங்களை எளிதில் கையாள முடிந்த நடிகை என்ற நம்பிக்கையை முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களிடம் அவர் ஏற்படுத்தியுள்ளார்.

சாந்தி பாலச்சந்திரனின் திறமை நடிப்புத் துறையில் மட்டும் நின்றுவிடவில்லை. ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட இவரது எக்ஸ்பிரிமென்டல் இசை வீடியோ ‘Oblivion’ மூலம் எழுத்தாளராகவும் திறமையை நிரூபித்துள்ளார். தற்போது, கோ ரைட்டராகவும் ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.

‘தி லவ்வர்’ மற்றும் ’எ வெரி நார்மல் ஃபேமிலி’ போன்ற விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட மேடை நாடகங்களிலும் நடிப்பின் மூலம் முத்திரை பதித்துள்ளார். இப்படி நம்பிக்கைக்குரிய நடிகையாக வலம் வரும் சாந்தி பாலச்சந்திரன் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த படங்கள் குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வரவிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here