நிகில், சம்யுக்தா மேனன் நடிக்க, பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கும் படம் ‘சுயம்பு.’ இந்த படத்தின் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியது.
’கார்த்திகேயா 2’ படத்தின் மூலம் புகழ் பெற்ற நாயகன் நிகிலின் தனது 20வது படமாக உருவாகிறது. நிகிலின் திரைப் பயணத்தில் இந்த படம் அதிக பொருட்செலவிலும் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடனும் உருவாகவிருக்கிறது.
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், வசனங்களை வாசுதேவ் முனேப்பகரி எழுதியுள்ளார்.படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நிகில் போர்வீரனாக குதிரையில் சவாரி செய்யும் போது ஒரு நாகத்தை நோக்கி அம்பு எய்வது போல் இருக்கிறது. அவரது தோற்றம் முதல் காஸ்ட்யூம் வரை இதுவரை நாம் பார்த்திராத புதிய நிகிலை ரசிகர்கள் பார்க்கவிருக்கின்றனர் என்பதை உணர்த்துகிறது. முன்பு வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போலவே, இப்போது வெளியான புதிய போஸ்டரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
உருவாக்கத்தில் உறுதுணை:-
எழுத்து, இயக்கம்: பரத் கிருஷ்ணமாச்சாரி,
தயாரிப்பாளர்கள்: புவன் மற்றும் ஸ்ரீகர்,
பேனர்: பிக்சல் ஸ்டுடியோஸ்,
வழங்குபவர்: தாகூர் மது,
இசை: ரவி பஸ்ரூர்,
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா,
வசனங்கள்: வாசுதேவ் முனேப்பகரி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: எம் பிரபாகரன்,
இணை தயாரிப்பாளர்கள்: விஜய் காமிசெட்டி, ஜிடி ஆனந்த்,
மார்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ