‘ப்ரோ’ திரைப்படத்தின் அட்டகாச வெற்றிக்குப் பிறகு, நடிகர் சாய் தரம் தேஜ் ‘சத்யாவின் ஆத்மா’ (Soul Of Satya) என்ற தனியிசைப் பாடலில் அசத்தியிருக்கிறார். பாடலில் நடிகை ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி இணைந்து நடித்துள்ளார்.
பாடலை சாய் தரம் தேஜின் உறவினரும் நடிகருமான ராம்சரண் சமூக வலைதளங்கள் வழியே வெளியிட்டார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த பாடல் நாட்டின் மீது கொண்ட அன்பிற்காக நாட்டை காக்க, தேசத்தின் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் தியாகங்கள் மற்றும் தடைகளை சித்தரிப்பதாக அமைந்துள்ளது.
பாடல் காட்சியை நவீன் விஜய் கிருஷ்ணா இயக்க, ஸ்ருதி ரஞ்சனி இசையமைத்து பாடியுள்ளார். விவேக் ரவி பாடலை தமிழில் எழுதியுள்ளார்.
தில் ராஜு புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பாலகம் என்ற வெற்றிப் படத்தை தயாரித்த ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஹன்சிதா ரெட்டி இந்த படைப்பைத் தயாரித்துள்ளனர்.