நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளில் புதிய படம் அறிவிப்பு! பஞ்சபூதங்களை மையமாக கொண்டு அசத்தும் டைட்டில் லுக் வெளியீடு.

நடிகர் சிரஞ்சீவி, வசிஷ்டா, யுவி கிரியேஷன்ஸ்  இணைந்து வழங்கும் புதிய படம் ‘மெகா157.’

நீண்ட நாட்களுக்குப் பிறகு, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி படத்தில் நடிக்கவுள்ளார். படத்தை தனது பிம்பிசாரா திரைப்படம் மூலம் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநர் வசிஷ்டா இயக்குகிறார். யுவி கிரியேஷன்ஸின் வெற்றிகரமான பேனரின் கீழ் வி வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் Mega157 திரைப்படம், சிரஞ்சீவியின் கேரியரில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் படமாக இருக்கும்.

சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் மெகா மாஸ் யுனிவர்ஸை வசிஷ்டா நமக்குக் காட்டப் போகிறார். வசீகரிக்கும் அறிவிப்பு சுவரொட்டியில் பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் போன்ற பஞ்சபூதங்கள் (இயற்கையின் ஐந்து கூறுகள்) நட்சத்திர வடிவத்தில், திரிசூலத்துடன் கூடிய ஒரு பொருளில் சூழப்பட்டுள்ளது. நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றை நாம் காணப் போகிறோம் என்பது இந்த அற்புதமான போஸ்டரின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திரைப்படம் என்பது அன்றாட யதார்த்தத்திலிருந்து நம்மை இலகுவாக்கி கொள்வதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும், ஃபேண்டஸி ஜானர் கொண்ட ஒரு கதையில் உங்களை முற்றிலும் வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்ல முடியும் இப்படிப்பட்ட ஒரு பிரமாண்ட திரைப்படத்தில் சிரஞ்சீவி போன்ற ஒரு நட்சத்திரம் நடித்தால், அது மிகவும் சுவாரஸ்யமாகவும் நம்மை எளிதில் கவர்ந்திழுக்ககூடியதாகவும் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here