‘சைந்தவ்’ படத்தின் 8-வது கதாபாத்திர அறிமுக போஸ்டர்… மெஷின் கன்னுடன் அசத்தல் லுக்கில் ஆர்யா!

விக்டரி வெங்கடேஷின் 75-வது படம் ‘சைந்தவ்.’ அந்த படத்தை ரசிகர்கள் மறக்க முடியாததாக மாற்றும் நோக்கில், தலைசிறந்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.

‘ஹிட்வெர்ஸ்’ சைலேஷ் கொலானு இயக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் வெங்கட் பொயனபள்ளி ‘நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட்ஸ்’ சார்பில் தயாரிக்கிறார்.

படத்தின் கதை எட்டு முக்கிய நடிகர்களை சுற்றி நடக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏழு கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தமிழ், தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக வலம்வரும் ஆர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவரது கதாபாத்திரத்தின் பெயர் மனாஸ்!

மெல்லிய தோற்றம், ஸ்டைலிஷ் லுக்கில் மெஷின் கன்னை கையில் வைத்துக் கொண்டிருக்கும் ஆர்யா, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அனைவரையும் கவர்கிறார்.

‘சைந்தவ்’ பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஆர்யா, ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெர்மியா, சாரா, ஜெயபிரகாஷ் என பலர் நடிக்கின்றனர்.

படம் இந்தி மற்றும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது.

படக்குழு:
எழுத்து, இயக்கம் – சைலேஷ் கொலானு
தயாரிப்பு – வெங்கட் பொயனபள்ளி
இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – எஸ்.மணிகண்டன் படத்தொகுப்பு – கேரி பி.ஹெச்
தயாரிப்பு வடிவமைப்பு – அவினாஷ் கொல்லா இணை தயாரிப்பு – கிஷோர் தல்லூர்
மக்கள் தொடர்பு – சதீஷ் குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here