மன்சூர் அலிகான் – யோகிபாபு நடிக்கும் ‘சரக்கு’ படத்தின் பாடல்கள் விநாயகர் சதுர்த்தியன்று வெளியீடு!

தமிழ் சினிமாவில் அதிரடி வில்லனாக வலம் வந்த மன்சூர் அலிகான், ஹீரோவான பிறகு சமூகத்திற்கு நல்ல விஷயங்களை சொல்லும் திரைப்படங்களை தயாரித்து நடித்து வருகிறார். தனது ஒவ்வொரு செயலையும் அதிரடியாக செய்யக்கூடிய அவர், யாருக்கும் பயப்படாமல் உண்மையை உரக்க சொல்லக்கூடியவர். அது மேடைப் பேச்சாக இருந்தாலும் சரி, திரைப்படங்களாக இருந்தாலும் சரி, சமூகத்திற்காக அவரது குரல் எப்போதும் ஓங்கி ஒலித்து வருகிறது.

அந்த வகையில், மதுப்பழக்கத்தால் பல ஏழை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதற்கு பின்னணியில் இருக்கும் உண்மையை தனது ‘சரக்கு’ திரைப்படம் மூலம் உரக்கச் சொல்ல வருகிறார்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் திரை முன்னோட்டம் ‘விநாயகர் சதுர்த்தி’ தினத்தில் வெளியாகிறது!

இது குறித்து மன்சூர் அலிகான் பேசியபோது, ‘‘ ‘சரக்கு’ படத்தை சமூக நோக்கு, நடப்பியல் எதார்த்த கேலிச் சித்திரமாக உருவாக்கியுள்ளேன். இது யார் மனதையும் புன்படுத்தவோ அல்லது பில்டப் செய்தோ, பல மாநில கதாநாயகர்களை கொண்டு வந்து, சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைத்து, அவர்களை கொலை செய்ய வைத்து கோடிக் கணக்கில் பணம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் தயாரித்து, நாயகனாக நடிக்கும் இப்படத்தை ஜெயக்குமார்.ஜே இயக்குகிறார்.

மிகப்பெரிய பொருட்செலவில், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மூலம் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகும் இதில், மன்சூர் அலிகானுடன் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, பழ கருப்பையா, சரவண சுப்பையா, ரவி மரியா, கோதண்டம், சேசு, அனுமோகன், பாரதி கண்ணன், ஆடுகளம் நரேன், நாஞ்சில் சம்பத், தீனா, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், சூப்பர் குட் சுப்பிரமணி, லொள்ளு சபா மனோகர், வினோதினி, ஸ்னாசி, தமிழச்சி திவ்யா, சசி லயா, டி.எஸ்.ஆர், மதுமிதா, வலினா, மோகன்ராம், மூசா, ரெனீஸ், நிகிதா, கூல் சுரேஷ், நீதியின் குரல் சி.ஆர்.பாஸ்கர், கோமாளி சரவணன், பபிதா என 40-க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். எஸ்.தேவராஜ் படத்தொகுப்பு செய்ய, சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here