மொழிகளுக்கேற்றபடி வெவ்வேறு இசையுடன் உருவான இந்தியாவின் முதல் படமாக ‘சிகாடா.’ இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா இயக்குநராக அறிமுகம்!

இசையமைப்பாளர்கள் இயக்குநர்களாகி கவனம் ஈர்த்த வரிசையில் எஸ்.எஸ்.குமரன், விஜய் ஆண்டனி உள்ளிட்டோரை தொடர்ந்து மலையாளத்தில் எட்டு படங்களுக்கு இசையமைத்துள்ள ஸ்ரீஜித் எடவானா நான்கு மொழிகளில் உருவாகும் ‘சிகாடா’ படத்திற்கு இசையமைப்பதோடு இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் ‘பான் இந்திய’ படைப்பாக தயாராகி வருகிறது. பொதுவாக நான்கு மொழிகளி தயாராகி படத்திற்கு பாடல்கள் அனைத்தும் ஒரே இசையில் (Tune) அமைந்திருக்கும்.
ஆனால் இதில், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட பதிப்புகளுக்காக புத்தம் புதிய மொத்தம் 16 ட்யூன்களுடன் இசையமைத்துள்ள பாடல்கள் படத்தின் மிகபெரிய சிறப்பமாக இருக்கிறது.  (1 title, 1 story, 4 different languages, 24 different tunes)

நான்கு வெவ்வேறு மொழிகளுக்கு வெவ்வேறு விதமான ட்யூன்களுடன் ஒரு படம் வெளியாவது என்பது இதுதான் முதல்முறை.

இந்த படம் முழுவதும் பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமரவைக்கும் ஒரு சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ளது.

வந்தனா மேனன் மற்றும் கோபகுமார்.P இருவரும் தீர்னா பிலிம்ஸ் அன்ட் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் இப்படத்தை தயாரிக்கின்றனர். தமிழில் இயக்குநர் விக்ரமன் படம் மூலமாக அறிமுகமாகி பிரபலமான மற்றும் பல தமிழ் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ள ரஜித் சி ஆர் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சுந்தர்.சியின் தலைநகரம்-2 படத்தில் வில்லனாக சிறப்பான நடிப்பை வழங்கியதன் மூலம் பிரபலமான ஜாய்ஸ் ஜோஸ் இப்படத்தில் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காயத்ரி மயூரா கதாநாயகியாக நடிக்கிறார்.

பெங்களூரு, சோலையூர், அட்டப்பாடி (தமிழக எல்லை), வாகமன் மற்றும் கொச்சி உள்ளிட்ட அழகான இடங்களில் ‘சிகாடா’வின் படப்பிடிப்பு நடை பெற்றிருக்கிறது. பாடல்களை நவீன் கண்ணன் எழுதியிருக்கிறார்.

சில பிரத்யேகமான இடங்களில் அழகான காட்சிகளை படமாக்க மிகப்பெரிய முயற்சியை ஒளிப்பதிவாளர் நவீன்ராஜ் வழங்கியிருக்கிறார். இவற்றில் சில இடங்களை அடைவதற்கு படக்குழுவினர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கடும் சிரமங்களுடன் நடந்தே சென்றுள்ளனர். நாயகன் ரஜித் சில கடினமான நிலப்பரப்புகளில் காட்டெருமை, காட்டு நாய்கள் ஆகியவற்றுடன் டூப் நபர்களை பயன்படுத்தாமல் நடித்திருக்கிறார் என்கிறார் இயக்குநர் ஸ்ரீஜித் எடவானா.

ஒவ்வொரு மொழிக்குமான சுவையையும் இயற்கைத்தன்மையையும் தக்கவைத்துக்கொள்ளுமாறு வெவ்வேறுவிதமான ட்யூன்களால் தனித்தன்மையான பாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. விரைவில் வெளியாகவுள்ள பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகப் போகின்றன. ஒலி வடிவமைப்பு இந்த சர்வைவல் த்ரில்லரின் முக்கிய ஈர்ப்பு அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது.தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பணியாற்றியுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா காதல் என் கவியே’, நெஞ்சோடு சேர்த்து’ உள்ளிட்ட ஹிட் பாடல்களைத் தந்தவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here