விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி, வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ரத்தம்.’ இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ரீவத்சன்.
விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துள்ள இவர் ‘வலியவன்’ ‘மஞ்சப் பை’ உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இப்போது முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக வாய்ப்புகள் கிடைத்து திறமை காட்ட தயாராகியிருக்கிறார்.தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ள சூழலில், ‘காமெடி வேடத்திலும் காமெடி வில்லனாகவும் நடித்து புகழ்பெற விரும்புகிறேன்’ என்கிறார் ஸ்ரீவத்சன். வெண்ணிற ஆடை’ மூர்த்தி பாணியில் காமெடி வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதும் ஸ்ரீவத்சனின் விருப்பமாக இருக்கிறது.
இவர் செய்தி வாசிப்பாளர் ஸ்ரீதரின் மகன் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.
ஸ்ரீதர், 1980 காலகட்டத்தில் தூர்தர்சனில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி சன் டிவி, ராஜ் டிவி, ஜெயா டிவி என வலம் வந்து இப்போது நியூஸ் 7 சேனலில் செய்தி வாசிப்பாளராக தொடர்கிறார். அவரது தமிழ் உச்சரிப்புக்கு கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் அபிமானிகள் என்பது ஹைலைட் சங்கதி.