ஓவியா கதையின் நாயகியாக நடிக்கும் வெப் சீரிஸ் ‘சுவிங்கம்.’ முக்கிய கதாபாத்திரங்களில் ராஜுவ், ஆஷிக், ஐரா, சிரா, ராம்குமார், டி ஆர் எஸ், லல்லு ஆகியோர் நடித்துள்ளனர்.
ரிதுன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். ‘மைன்ட் டிராமா புரொடக்சன்’, ‘ஒயிட் டக் ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. சுராஜ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை அருண் கவனிக்கிறார்.
இந்த சீரிஸ் பற்றி இயக்குநர் ரிதுன் பேசும்போது, ‘‘இது முழுக்க முழுக்க மனித உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. ஓவியா வளர்ப்புத் தாயிடம் யதார்த்தமான, சாதாரண பெண்மணியாக வாழ்கிறார். அவரைச் சுற்றியிருக்கும் பலரும் அந்தஸ்துக்காகவும் பணத்திற்காகவுமே வாழ்கிறார்கள். அவர்களுக்கு இடையேயான வாழ்வியலை உணர்வுபூர்வமாகவும் காமெடியாகவும் சொல்லியிருக்கிறோம்.
ஓவியா இதில் ரேடியோ மிர்ச்சி எப்எம் சேனலில் ஆர் ஜே வாக பணியாற்றுபவராக, கிராஸ் டாக் எனும் நிகழ்ச்சியில் சமுதாயம் சார்ந்த கருத்துக்களை காமெடியாக எடுத்துச் சொல்பவராக வருகிறார்” என்றார்.