நெருக்கடியில் சிக்கிய காதலன், நண்பன்… நாயகி காப்பாற்றப் போவது யாரை? பரபரப்பான திரில்லராக உருவாகும் ‘சாரா’ படத்தின் துவக்கவிழாவில் ‘இசைஞானி’ இளையராஜா பங்கேற்பு!

கார்த்திக் ராஜா இசையமைக்க, சாக்‌ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிக்க, ரஜித்கண்ணா இயக்கத்தில் மாறுபட்ட திரில்லர் படைப்பாக உருவாகவிருக்கிறது ‘சாரா.’ இந்த படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரோபோ சங்கர், பொன்வண்ணன், அம்பிகா, ரேகா நாயர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் துவக்கவிழா படக்குழுவினரோடு, திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள விநாயகர் சதுர்த்தி நன்னாளான இன்று (18.9.2023) பூஜையுடன் நடந்தது. ‘இசைஞானி’ இளையராஜா கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

நிகழ்வில் இயக்குநர் ரஜித் கண்ணா பேசியபோது, ‘‘பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு, மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக இந்த படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் சாக்‌ஷி அகர்வால் நடிக்கிறார். ஆக்சன் அவதாரத்தில் அவருக்கு இது திருப்புமுனை படமாக இருக்கும்.ஒரு இக்கட்டான சூழலில், தனக்காக எல்லாவற்றையும் விட்டு வந்த காதலனையா? அல்லது தனக்காக வாழ்க்கையை தியாகம் செய்த நண்பனையா? நாயகி யாரை காப்பாற்றுகிறாள் என்பதே கதைக்களம். கட்டிடங்கள் கட்டப்படும் பின்னணியில் கதை நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பல சண்டைக்காட்சிகளுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக உருவாகவிருக்கிறது. இந்த படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக நல்ல அனுபவம் தரும்” என்றார்.

கதாநாயாகன் விஜய்விஷ்வா பேசியபோது, ‘‘கார்த்திக்ராஜா இசையில் நான் நடிக்கவுள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது. யோகிபாபுவுடன் இணைந்து முதன்முறையாக நடிக்கிறேன். சாக்‌ஷி, பொன்வண்ணன், அம்பிகா, ரோபோ சங்கர், ஆகியோருடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சி” என்றார்.

கதாநாயகி சாக்‌ஷி பேசியபோது, ‘‘இந்த படத்திற்கு என்னை தேர்வு செய்த இயக்குநருக்கு நன்றி. கார்த்திக்ராஜா சார், இளையராஜா சார் மற்றும் வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி. இந்தப்படம் ஒரு புதுமையான அனுபவம் தரும் படமாக இருக்கும்” என்றார்.

இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா பேசியபோது, ‘‘இந்த விழாவை விளக்கேற்றி துவக்கி வைத்த என் தந்தைக்கு நன்றி. இந்தப் படம் அனைத்து உணர்வுகளையும் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். கண்டிப்பாக ஒரு நல்ல படமாக உருவாகும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் ரோபோ சங்கர் பேசியபோது, ‘‘இந்தப் படம் மூலமாக விஜய் விஷ்வா ஒரு நல்ல திரைப்படம் தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கும் படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.

ஸ்டன்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா பேசியபோது, ‘‘சாக்‌ஷியும் நானும் இணையும் இரண்டாவது படம் இது. இந்த படத்தில் அதிகளவில் சண்டை காட்சிகள் இடம் பெறவிருக்கிறது” என்றார்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு – விஸ்வா டிரீம் வேர்ல்டு’ ஆர்.விஜயலஷ்மி, செல்லம்மாள், குருசாமி ஜி
இசை – கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு – ஜெ.லக்ஷ்மன்
எடிட்டர் – எஸ்பி அஹமத்.
கலை இயக்குநர் – சுரேஷ் கல்லெரி
சண்டை பயிற்சி – ‘மிரட்டல்’ செல்வா
பாடல்கள் – சினேகன், அருண் பாரதி
தயாரிப்பு மேலாளர் – சுந்தரம் சிவம்
புகைப்படம் – சுரேஷ்
ஆடை வடிவமைப்பு – ராஜன்
மேக்கப் – கரி சுல்தான்
மக்கள் தொடர்பு – ஏ.ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here