பிரபல இயக்குநர் ராஜேஷ் எம்.மிடம் அசோசியேட் இயக்குநராக இருந்த துரை கே முருகன் இயக்கும் படம் ‘சீரன்.’
சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தில் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா, ஆடுகளம் நரேன், அருந்ததி நாயர், செண்ட்ராயன், பாடகர் ஆஜித், கிரிஷா குரூப், ‘சூப்பர் குட்’ சுப்ரமணி, ஆரியன், ‘பரியேறும் பெருமாள்’ வெங்கடேஷ், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான ஜேம்ஸ் கார்த்திக் பேசியபோது, ‘‘இந்தப் படம் எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு. தயாரிப்பிலும் நடிப்பிலும் இந்தப் படத்தில் நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். இயக்குநர் எனக்கு மிகச்சிறந்த நண்பர். தயாரிப்பாளருக்கு ஒரு ரூபாய் கூட நஷ்டம் வரக்கூடாது என்று நினைப்பவர். அவருடன் இணைந்து பல படங்கள் செய்ய நினைக்கிறேன்.
பாடல்களும் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். நான் என் சிறு வயதில் பார்த்த விஷயங்களை இந்தப் படத்தில் கொண்டு வர முயற்சி செய்துள்ளோம்” என்றார்.
இயக்குநர் துரை கே முருகன் பேசியபோது, ‘‘இந்த படம் தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது. அவர் சொன்னதைக் கேட்டபோது, என் சிறு வயதில் என் தாத்தா, எத்தனை ஜாதிவெறியுடன் இருந்துள்ளார் என்ற ஞாபகமும் மிகப்பெரும் கோபமும் வந்தது. அதனை அழுத்தமாக இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறோம். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இனியா மற்றும் சோனியா அகர்வால் இருவருக்கும் கண்டிப்பாக இந்தப் படம் ஒரு மிகப்பெரிய பெயர் வாங்கி தரும். கதாநாயகன் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். மற்றவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படம் ஒட்டு மொத்த உணர்வையும் கொடுத்து, சமூக கருத்தையும் பதிவு செய்யும்” என்றார்.
நடிகை இனியா பேசியபோது, ‘‘இந்த படத்தில் பூங்கோதை என்ற கதாபாத்திரத்தில் எடை கூட்டிக் குறைத்து நடித்துள்ளேன். நான் இப்படி நடித்தது இதுவே முதல் முறை” என்றார்.
சோனியா அகர்வால் பேசியபோது, ‘‘எனக்கு இதன் கதை மிகவும் பிடித்திருந்தது. கோவில் படத்திற்குப் பிறகு கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். கண்டிப்பாக இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறும்” என்றார்.
பாடகரும் நடிகருமான ஆஜித், நடிகர்கள் ஆடுகளம் நரேன், சூப்பர் குட் சுப்ரமணி, பரியேறும் பெருமாள் வெங்கடேஷ் ஆர்யன், நடிகைகள் கிரிஷா குரூப், அருந்ததி நாயர், இசையமைப்பாளர்கள் ஏகே சசிதரன், ஜூபின், கவிஞர் கார்த்தி, எடிட்டர் ரஞ்சித் குமார், ஒளிப்பதிவாளர் பாஸ்கர், சண்டைப் பயிற்சியாளர் ரமேஷ் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.