யோகி பாபு, பிரமோத் ஷெட்டி நடிக்கும் ‘சன்னிதானம் பி.ஓ.’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!

யோகி பாபு, பிரமோத் ஷெட்டி நடிப்பில் குடும்ப உணர்வுகளும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்த படைப்பு ‘சன்னிதானம் பி.ஓ.’

இந்த படம் அறிமுக இயக்குநர் அமுதாசாரதி இயக்கத்தில், சபரிமலை பின்னணியில் தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகிறது. வர்ஷா விஸ்வநாத், மேனகா சுரேஷ், மூணார் ரமேஷ், வினோத் சாகர் மற்றும் அஸ்வின் ஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படம் குறித்து பேசிய இயக்குநர் அமுதாசாரதி, ‘‘சிறுவயதில் தொலைந்த தனது மகனை தேடும் ஒரு தாயின் கதையை குடும்ப உணர்வுகளும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்து ‘சன்னிதானம் பி.ஓ’ சொல்லும். தாயாக சித்தாராவும், மகனாக யோகி பாபுவும் நடிக்கின்றனர். மற்றொரு முதன்மை கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் பிரமோத் ஷெட்டி நடிக்கிறார்.

சபரிமலை பின்னணியில் நடக்கும் இக்கதையின் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்க உள்ளது. பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும். உணர்வுப்பூர்வமான ஒரு கதையை நகைச்சுவை ததும்ப பார்வையாளர்களுக்கு இத்திரைப்படம் வழங்கும்” என்றார்.

படத்தை ‘சர்வதா சினி காரேஜ்’, ‘ஷிமோகா கிரியேஷன்ஸ்’ சார்பில் மது ராவ், ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

படக்குழு:-
கதை, திரைக்கதை – அஜினு ஐயப்பன் வசனம் – அமுதாசாரதி
ஒளிப்பதிவு – வினோத் பாரதி.ஏ. படத்தொகுப்பு – பொன் கதிரேஷ் உடைகள் – நடராஜ்
ஒப்பனை – ஷிபுகுமார்
கலை – விஜய் தென்னரசு
சண்டைப் பயிற்சி – மிரட்டல் சிவா
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here