‘கழுகு’ சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ் நடிக்கும் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பு!

சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ் நடிக்கும் புதிய திரில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘கழுகு’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த சத்யசிவா, 90களில் உண்மையாக நடைபெற்ற சம்பவம் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்துள்ளார்.

சசிகுமார் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடிக்கிறார். பாலிவுட் படங்களில் மிரட்டும் சுதேவ் நாயர் வில்லனாக நடிக்கிறார். பருத்திவீரன் சரவணன், கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தமிழில் பல பிரமாண்ட படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றிய பாண்டியன் பரசுராம், முதல் முறையாக விஜயகணபதி பிக்சர்ஸ் (Vijayaganapathy’s Pictures) சார்பில் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

90 கால கடத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த கால கட்டத்தைத் திரையில் கச்சிதமாகக் கொண்டுவரப் படக்குழு கடுமையாக உழைத்து வருகிறது. 90களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு பிரமாண்டமான செட் அமைத்து படத்தின் காட்சிகளைப் படக்குழு படமாக்கி வருகிறது.

இந்த படத்தின் தலைப்பு, டீசர், டிரெய்லர் வெளியீடு பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு -என் எஸ் உதயகுமார்
எடிட்டர் – ஶ்ரீகாந்த் என் பி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here