திரைக்கலைஞர் எஸ்.வி.சேகரின் நாடகப்பிரியா குழுவின் சார்பில் 7000மாவது நாடகம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நடந்தது.
நிகழ்வில், எஸ்.வி.சேகரின் நாடக குழுவின் பி ஆர் ஓ பணியிலிருக்கிற ஈ.வெ.ரா மோகன், விஜயமுரளி, கிளாமர் சத்யா உட்பட அவர் குழுவில் உள்ள கலைஞர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தார்!
‘நாடகம் பார்ப்பவர்கள் மட்டுமல்ல தன்னுடன் இருப்பவர்களும் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்ற எஸ்.வி.சேகரின் நல்ல எண்ணத்திற்கு இது ஒரு எடுத்துக் காட்டு’ என்று குறிப்பிட்டு நினைவுப் பரிசு பெற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்.