நடிகர் கரிகாலன் கதை, திரைக்கதை,வசனம்,பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘சண்ட சண்டயத்தவிர வேறேதுமில்ல.’
கரிகாலன், கஸ்தூரி ராஜா இயக்கிய ‘சோலையம்மா’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அன்று தொடங்கி இன்றுவரை ‘ரமணா’, ‘அரவான்’, ‘தாய் மனசு’, ‘அடிமைச் சங்கிலி’ என 80க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்துள்ளார். ‘ஏதோ நினைவுகள்’ டெலி சீரியலை இயக்கியுள்ளார். சில வருடங்கள் முன் ‘வைரவன்’ என்ற திரைப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர், இரண்டாவது படமாக இப்போது ‘சண்ட சண்டயத்தவிர வேறேதுமில்ல’ படத்தை இயக்கியுள்ளார்.
‘இது வன்முறைக்கு எதிரான படம்’ என்ற டேக்லைனுடன் வருவது படத்தின் தனித்துவம்,
படத்தில் கரிகாலன், வேதா, ‘டத்தோ’ ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட், வையாபுரி, செந்தூர் கண்ணன், கார்த்திக், அசோக் தமிழ், விஜய் பாரத், குழந்தை நட்சத்திரம் தீக்ஷண்யா, ‘காக்கா முட்டை’ சாந்தி, ரங்கம்மாள் பாட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படம் இரு வில்லன்களின் கதையை சொல்கிறது. யோசிக்கவே முடியாத பல திருப்பங்களை கொண்ட அதிரடியான ஆக்சன் டிராமா சப்ஜெக்டாக உருவாகியுள்ளது. கரிகாலன் பவர்ஃபுல் வில்லனாக மிரட்டுகிறார், ‘தனா கிரியேஷன்’ இந்த படத்தை தயாரித்துள்ளது.
செழியன், இயக்குநர் கரிகாலன் இணைந்து இசையமைத்துள்ளனர். இவர்கள் இருவரும் மதம் சார்ந்த பாடல்கள், விளம்பரப் பாடல்கள், தனியிசைப் பாடல்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட ஆல்பங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளனர். தொடர்ச்சியாக மூன்று படங்களுக்கு இணைந்து இசையமைக்கின்றனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளரும், ‘போக்கிரி’, ‘பில்லா’, ‘கிரீடம்’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘சங்கத் தலைவன்’, ‘திமிரு பிடிச்சவன்’ உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்தவரும், ‘தவம்’, ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’, ‘லக்கி’, ‘பைசா’ படங்களின் ஒளிப்பதிவாளருமான வேல் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
‘அல்டி’, ‘கள்ளத் துப்பாக்கி’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’, ‘காட்டுப் பய சார் இந்த காளி’ உள்ளிட்ட பல படங்களிலும், பல்வேறு குறும்படங்களிலும், ‘சிங்கப் பெண்ணே’, ‘போலீஸ் டைரி 2.0.’ உள்ளிட்ட வெப் சீரிஸிலும் எடிட்டராக பணிபுரிந்த வில்சி இந்த படத்துக்கு எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.
‘சூப்பர்’ சுப்பராயன், ராக்கி ராஜேஷ் உள்ளிட்ட சண்டைப் பயிற்சியாளர்களிடம் உதவியாளராக இருந்தவரும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், பெங்காலி மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் சண்டைப் பயிற்சியாளராக பணிபுரிந்தருவான ‘இடிமின்னல் இளங்கோ’ இந்த படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார்.
படைப்பில் பங்களிப்பு:-
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், திரைச்சீவல்கள் (ஜிம்மிக்ஸ்), இயக்கம் – கரிகாலன்
இணை இயக்குநர்கள் – ஜோசப் கோபி, மகா விஷ்ணு, எஸ்.ஏ.டேவிட்
தயாரிப்பு – தனா கிரியேஷன்
தயாரிப்பு நிர்வாகிகள் – ஆத்மநாபன் & தங்கவேலு
ஒளிப்பதிவு – வேல்முருகன்
படத்தொகுப்பு – வில்சி
இசை – செழியன் & இயக்குநர் கரிகாலன்
நடனம் – பாலகுமாரன் ரேவதி
சண்டைக் காட்சிகள் – ‘இடி மின்னல்’ இளங்கோ
சந்தைப்படுத்துதல் & வணிக ஊக்குவிப்பு – ஆன்டோ ஜெர்ரி
மக்கள் தொடர்பு – பா .சிவக்குமார்