யாஷிகா ஆனந்த் பேயாக நடிக்கும் ‘சைத்ரா’ நவம்பர் 17-ல் ரிலீஸ்! ‘பீட்சா’, ‘டிமான்டி காலனி’ படங்களைப் போன்ற அனுபவத்துக்கு தயாராகுங்கள்.

யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக, பேயாக நடித்திருக்கும் படம் ‘சைத்ரா.’

படத்தில் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘பொட்டு, ‘கா’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய எம்.ஜெனித்குமார் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ‘‘இதுவரை யாரும் பார்த்திராத பரபரப்பான சம்பவங்களுடன் கூடிய முழுக்க முழுக்க திரில்லர் கலந்த ஹாரர் படம் இது. ‘பீட்சா’, ‘டிமான்டி காலனி’ படங்களைப் போல் வித்தியாசமான திரைக்கதை அமைத்து படத்தை உருவாக்கியுள்ளோம்.

24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது. படத்தின் காட்சிகள் முழுவதையும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல் கிணறு பகுதியில் படமாக்கினோம். படம் நவம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘பிவிஆர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது” என்றார்.

படக்குழு:-
தயாரிப்பு – ‘மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ்’ கே. மனோகரன்
இணை தயாரிப்பு – டி. கண்ணன் வரதராஜ்
தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி
ஒளிப்பதிவு – சதீஷ் குமார்
இசை – பிரபாகரன் மெய்யப்பன்
பாடல் வரிகள் – மணிகண்டன், விஜய லட்சுமி
எடிட்டிங் – எலிஷா ( பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்தவர்)
மக்கள் தொடர்பு – மணவை புவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here