சபரி மணிகண்டன் இயக்கத்தில், கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில், ஸ்ரீ பி
இசையில், ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜீவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா குரல்களில் உருவான, வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையைப் பேசும் அழகான ஆல்பம் பாடல் ‘செகண்ட் சான்ஸ்.’
மகேஷ் சுப்பிரமணியம், அம்மு அபிராமி நடித்துள்ள இந்த பாடல் சென்னையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. இளம் நட்சத்திரங்கள் ரியோ, மாஸ்டர் மகேந்திரன், சௌந்தரராஜா உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டு படக்குழுவை பாராட்டி வாழ்த்தினர்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் சபரி மணிகண்டன், ”மகேஷ் மூலம் தான் இந்த புராஜக்ட் ஆரம்பமானது, இதற்காக அவர் மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளார். நீங்கள் நடிகராக ஆசைப்படுகிறீர்கள் நான் இயக்குநராக ஆசைப்படுகிறேன் அதனால் இதில் கண்டிப்பாக கதை இருக்க வேண்டும் என்றேன், முழு அர்ப்பணிப்புடன் உழைப்பைத் தந்தார். மது இன்று தான் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார், கார்த்திக் மது இருவரும் எல்லாவற்றையும் எங்களிடம் நம்பி விட்டு விட்டார், அவருக்கு என் நன்றிகள்.
அம்மு அபிராமி இந்த பாடலை நம்பி வந்தார், ஷூட்டிங்கில் முழு ஒத்துழைப்பு தந்தார். அவருக்கு என் நன்றி. 10 மணிக்கு சொன்னால் 9 மணிக்கு வந்து விடுவார். ஸ்ரீதர் மாஸ்டர் அவர் நடன அமைப்பு, எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த முழுப் பாடலும் என் கூடவே இருந்தார், அவர் பெயரால் தான் இந்த பாடல் தெரிகிறது அவருக்கு என் நன்றி. என் தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருமே என் நண்பர்கள். படம் வேலை பார்த்தால் கூட எனக்காக வந்து, செய்தனர். ஜீவி, நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா சுரேஷ்க்கு என் நன்றி, இந்தப்பாடல் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்படி செய்துள்ளோம்” என்றார்.
நடிகர் ரியோ, ”இந்த பாடலில் மகேஷ் மற்றும் அபிராமி இருவரின் பெர்ஃபாமன்ஸ் மிக பிரமாதமாக இருக்கிறது. நானும் மகேஷும் ஜோடி ரியாலிட்டி ஷோவில் ஒன்றாக பங்கேற்றோம்.
ஜிவி பிரகாஷ் மற்றும் நரேஷ் ஐயருடைய பாடல்கள் தனித்தனியாக பிரமாதமாக இருக்கும். இதில் அவர்கள் இருவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள். அது இன்னும் அற்புதமாக இருக்கிறது. ஹூக் ஸ்டெப்க்கு பெயர் போன ஸ்ரீதர் சாருடைய நடன அமைப்பு இதில் பிரமாதமாக இருக்கிறது. பாடல் கேட்பதற்கு கேட்சியாகவும், ரசிக்கும் படியும் இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் மகேஷ் சுப்பிரமணியம், இது நிறைய பட்ஜெட் தேவைப்படும் பாடல். ஆனால் மிக அழகாக இதை உருவாக்கி விட்டார் சபரி” என்றார்.
நடிகை அம்மு அபிராமி, தயாரிப்பாளர் மது, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், நடிகர் சௌந்தரராஜா, இசையமைப்பாளர் ஶ்ரீ பி, ஒளிப்பதிவாளர் ஜோசப் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்று பாடல் குறித்து பேசினார்கள்.
பாடல் பற்றி:-
காதலின் பல்வேறு தருணங்களை தன் பேனாவால் வரலாறாக்கிய கவிப்பேரசு வைரமுத்து, இந்த செகண்ட் சான்ஸ் பாடலை எழுதியுள்ளார்.
காதலில் நாம் செய்யும் தவறுகள், ஈகோ, அவசரம் நம்மை மீறிய கட்டத்திற்கு இழுத்து காதலை அழித்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒருவனுக்கு அந்த தவறுகளை சரி செய்து கொள்ளும் வகையில் ஒரு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கிறது. அதனை அவன் எப்படி பயன்படுத்திக்கொள்கிறான் என்பது தான் இந்த ஆல்பம் பாடலின் கரு.
இப்பாடலின் தீமை உருவாக்கி இன்றைய ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் இயக்கியுள்ளார் சபரி மணிகண்டன்.
இந்த ஆல்பம் பாடலை அனைத்து இசை தளங்களிலும் ரசிக்கலாம். காதலின் மறுபக்கத்தை அழகாக பேசுவதை உணரலாம்.