‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஷூட்டிங் துவக்கத்திலேயே அதிரடி சண்டைக் காட்சி!

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, இயக்குநர் விவேக் ஆத்ரேயா, தயாரிப்பு நிறுவனமான டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ் இணையும் இரண்டாவது படைப்பு ‘சூர்யாவின் சனிக்கிழமை.’

பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில், நானி வித்தியாசமான முரட்டுத் தோற்றத்தில் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் துவக்கவிழா கடந்த மாதம் பூஜையுடன் நடந்தது. நானியை தனித்துவமான அதிரடி அவதாரத்தில் காட்டிய இப்படத்தின் அறிமுக அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து படப்பிடிப்பு அதிரடி ஆக்சன் காட்சியுடன் நவம்பர் 14; 2023 அன்று ஹைதராபாத்தில் தொடங்கியது.

ராம், லக்ஷ்மண் மாஸ்டர்கள் சாகச சண்டைக்காட்சியை வடிவமைக்கிறார்கள். இந்த ஷெட்யூலில் ஆக்ஷனுடன் சில வசன காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. இப்படப்பிடிப்பில் நாயகன் நானி மற்றும் படத்தின் முக்கிய கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்தப் படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். புகழ்மிகு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, முரளி ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

படக்குழு:-
எழுத்து, இயக்கம்: விவேக் ஆத்ரேயா
தயாரிப்பாளர்கள்: டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ் டிவிவி தனய்யா, கல்யாண் தாசரி
இசை: ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு: முரளி ஜி
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீநிவாஸ்
சண்டைக் காட்சிகள்: ராம், லக்ஷ்மன்
மார்க்கெட்டிங்: வால்ஸ் அண்ட் டிரெண்ட்ஸ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here