சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால் நடிக்கும் ‘செருப்புகள் ஜாக்கிரதை’ ZEE 5 ஓடிடி வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ZEE5 தளத்தில் ‘செருப்புகள் ஜாக்கிரதை’ சீரிஸ் மார்ச் 28 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது. முன்னதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் வகையில், முற்றிலும் நகைச்சுவையை மையமாக வைத்து, ரசிகர்கள் வயிறு குலுங்கி சிரித்து மகிழும் வகையிலான, அசத்தலான காமெடி சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

வைரங்களை கடத்தி விற்கும் வியாபாரி ரத்தினம், தனது பொக்கிஷமான வைரத்தை அவனது செருப்பு ஒன்றில் மறைத்து வைக்கிறார். ரெய்டு அதிகாரிகளுக்கு பயந்து, அந்த செருப்பை ஆடிட்டரான தியாகராஜனிடம் ( சிங்கம்புலி ) கொடுக்கிறார். தியாகராஜனும் அவரது மகன் இளங்கோவும் செருப்பை தொலைத்து விடுகிறார்கள். வைரம் உள்ள செருப்பைத் தேடி அலையும், கலகலப்பான பயணம் தான் இந்த சீரிஸ். ஒவ்வொரு எபிஸோடும் கலக்கலான காமெடியுடன், பரபர திருப்பங்களுடன் வெகு சுவாராஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சீரிஸில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சிங்கம்புலி நடித்திருக்கிறார். இவருடன் விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், மனோஜ் கிரீஷ்,உசேன், சவால்ராம், சபிதா ,உடுமலை ரவி, பழனி, director பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழுவில், ஒளிப்பதிவு – கங்காதரன், இசை – LV முத்து கணேஷ், எழுத்து – எழிச்சூர் அரவிந்தன், Editor – வில்சி J சசி, ஆடியோகிராஃபி – டோனி J, கலை – S சதீஷ்குமார், சவுண்ட் டிசைன் – ஹரி ஹரன், உடை வடிவமைப்பு – M அஷோக் குமார் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here