ஒரு கோழியால் இரண்டாகப் பிரியும் கிராமம்… படு வித்தியாசமான கதைக்களத்தில் ‘பிக் பாஸ்’ பூர்ணிமா ரவி நடிக்கும் ‘செவப்பி’ வெப் சீரிஸ்!

‘பிக் பாஸ்’ பூர்ணிமா ரவி நடிப்பில், எம்.எஸ்.ராஜா இயக்கத்தில் உருவான ‘செவப்பி’ வெப் சீரிஸ் வரும் ஜனவரி 12; 2024 அன்று வெளியாகவுள்ளது.

இந்த சீரிஸில் குமரன் என்ற 5 வயது சிறுவன் கதாபாத்திரமும், அவனுக்கு அம்மாவாக நடித்திருக்கும் ‘பிக் பாஸ்’ பூர்ணிமா ரவியின் கதாபாத்திரமும் முதன்மையாக இருக்க, பிரபல தமிழ் கலைஞரான ரிஷிகாந்த் சிறுவனின் தாய் மாமாவாக நடித்துள்ளார். ராஜாமணி பாட்டி, ஷ்ரவன் அத்வேதன், டில்லி, செபாஸ்டியன் ஆண்டனி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

1990-களில் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு ஐந்து வயது சிறுவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள்தான் கதைக்களம். சிறுவன் ஒரு கோழியை, தந்தை தன் குழந்தைகள் மீது காட்டுவதுபோல் அதீத அன்போடு அந்த கோழியை பாதுகாப்போடும் நேசத்தோடும் வளர்க்கிறான். அந்த பாசப்பிணைப்பை ஒரு கட்டத்தில் பிரிய நேரிடுகிறது. அதனால் இரு தரப்பினர்கள் ஒற்றுமையாக வாழும் அந்த கிராமம் இரண்டாகப் பிரிந்து மோதிக்கொள்கிறது. இப்படி நகரும் கதையில் அந்தச் சிறுவனும் கோழியும் இணைந்தார்களா, கிராம மக்களின் ஒற்றுமை எனனவானது என்பதே கிளைமாக்ஸ்.

கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள மத்திபாளையம் என்ற கிராமத்தில் படம் முழுவதும் வெறும் 27 நாட்களில் படமாக்கப்பட்டது. ப்ரீ புரொடக்‌ஷன் கட்டத்தில், பல கிராமவாசிகள் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதை இயக்குநர் ராஜாவும் அவரது குழுவினரும் கண்டுபிடித்தனர். கிராமவாசிகள் ஆசையை நிறைவேற்றவும் கதையின் உண்மைத் தன்மைக்காகவும் அவர்களுக்கும் நடிக்க வாய்ப்பளித்துள்ளார்கள்.

இந்த ஃபீல் குட் படத்தை ராஜேஷ்வர் காளிசாமி, பிரசன்னா பாலச்சந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர்.

படக்குழு:
ஒளிப்பதிவு: மனோகரன்.எம்
இசை: ஏ.பிரவீன் குமார்
எடிட்டிங் & விஎஃப்எக்ஸ்: வச்சு லட்சுமி
ஒலி வடிவமைப்பு: ஷெஃபின் மாயன்
கலை: ஆசைத்தம்பி
ஆக்‌ஷன் கோரியோகிராஃபி: அபிஷேக் ஸ்ரீனிவாஸ்
விளம்பர வடிவமைப்பு: ராகவன்
நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ்.வினோத்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here