தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்வதற்கான தகுதியோடும் திறமையோடும் நடிப்புப் பயணத்தை தொடர்கிறார் லீஷா எக்லேயர்ஸ்.
ஏஜே. சுஜித் இயக்கிய ‘பிரியமுடன் பிரியா’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இவர்.
சன் டிவி ‘கண்மணி’ சீரியலில் ‘கண்மணி’யாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
ஷாருக்கானின் ரசிகையான இவருக்கு, அவரது படத்தில் நடித்துவிட வேண்டும் என்பது ஆசை. அந்த ஆசையை அட்லியின் இயக்கத்தில், ‘ஜவான்’ படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு நிறைவேற்றியது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் ஷாருக்கான் மீதான அபிமானத்தால் ஒத்துக்கொண்டு நன்றாக நடித்து ஷாருக்கானின் நன்மதிப்பை பெற்றார்.
அதையடுத்து ‘மணிதீப் எண்டர்டைண்ட்’ நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ‘ரைட்’ என்ற திரைப்படத்தில் ஒப்பந்தமானார். அந்த படத்தில் தெலுங்கு ‘பிக் பாஸ்’ பிரபலம் கௌசல் மண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளில் வெற்றி பெற்ற படத்தின் ரீ மேக்காக உருவாகியுள்ள ‘ரைட்’ இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடிக்க விரும்புகிற லீஷா எக்லேயர்ஸ் அதற்கான திறமையோடு இருப்பதால் விரைவில் தமிழ் , தெலுங்கில் முன்னணி நடிகை என்ற இடத்தைப் பிடிப்பார் என்பது உறுதி!