‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ‘கே ஜி எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்.’
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்தது. வெளியான முதல் நாளில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 178.7 கோடி ரூபாயை வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது. அத்துடன் இந்தியா முழுவதும் மாஸ் ஒப்பனிங் பெற்ற ஒரே இந்திய திரைப்படம் என்ற பெருமிதத்தையும் பெற்றது.
தொடர்ந்து வசூல் சாதனையை செய்து.. தற்போது 500 கோடி ரூபாயை கடந்திருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டின் மிகப்பெரிய பொழுது போக்கு படைப்புகளைப் பார்வையிடும் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய திரைப்படமாகவும் இப்படம் திகழ்கிறது.
‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’ ஆகிய படங்களுக்குப் பிறகு, 500 கோடி ரூபாய் வசூலைக் கடந்த மூன்றாவது திரைப்படம் என்ற சாதனையும் ‘சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படைத்திருக்கிறது.
இத்திரைப்படம் வெளியானதிலிருந்து ரசிகர்கள், பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களிடமிருந்தும் ஏகோபித்த அன்பையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது. கற்பனை திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் நீல் உருவாக்கிய கான்சார் எனும் புனைவு உலகத்தின் வாழ்க்கை.. அதில் இடம் பெற்ற ஆக்சன் நிறைந்த உலகம்.. ஆகியவற்றை அவருடைய பிரத்யேக பாணியில் வழங்கிய விதம்.. ‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் மற்றும் ஏனைய நட்சத்திர நடிகர்களின் கடும் உழைப்பு.. தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு … ஆகிய அனைத்தும் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றிருக்கிறது.