‘தப்புத் தண்டா’ படம் மூலம் அறிமுகமான நடிகர் சத்தியமூர்த்திக்கு, தயாரிப்பாளர் என்ற அடையாளமும் இருக்கிறது.
தற்போது முழுக்க முழுக்க பிரபல யூ டியூபர்கள் உருவாக்கிய ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற படத்தில் நடித்துள்ளார். இளைய தலைமுறையை கவரும் விதத்திலான இந்த படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது.
அவரிடம் பேசியபோது, ‘‘ ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ வழக்கமான பேய் படமாக இருக்காது. வித்தியாசமான கதையால் கவரும். அடுத்த வருடம், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் நான் நடித்த இரண்டு படங்கள் வெளியாகவிருக்கிறது” என்றார்.