மன்சூர் அலிகான் நடித்துள்ள ‘சரக்கு’ திரைப்படம் காமெடியோடு, மதுப்பழக்கத்தால் ஏற்படும் சமூகச் சீர்கேடுகளை எடுத்துக் காட்டியிருக்கிறது. இந்த படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி, பரவலான வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் படத்தில் வழக்கறிஞர்களையும், நீதிமன்றங்களையும் அவமதிக்கும் படியான புகைப்படங்களும், காட்சிகளும் இருப்பதாக, சில வழக்கறிஞர்கள் அவர்களின் வாட்ஸ்ஆப் குழுக்களில் பதிவிட்டு, கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மன்சூர் அலிகானை தொடர்பு கொண்டு, கண்டபடி திட்டுவதும் தொடர்கிறது.
அதையடுத்து அவருக்கு வந்த வாட்ஸ்ஆப் பதிவுகளை மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ளார். அவை இணையதளங்களில் பரவி பரபரப்பு கூட்டியிருக்கிறது.
மாதிரிக்கு சில வாட்சப் பதிவுகள்:
1. அன்பார்ந்த வழக்கறிஞர் பெருமக்களே மன்சூரலிகான் நடிக்கும் சரக்கு என்கிற படத்தில் மதுபாட்டிலையும் வழக்கறிஞர் நெக் பட்டையத்தையும் நீதித்துறை சின்னமான நீதிதேவதை சின்னத்தையும் போட்டு வழக்கறிஞர் மற்றும் நீதித்துறையும் அவமானம் செய்துள்ளார் இதுபோன்ற செயலில் இடுபட்ட மன்சூரலிகான் தொடர்பு கொண்டு கேட்டபோது நீங்கள் எதுவேணாலும் செய்து கொள்ளுங்கள் என தான் தோன்றிதனமாக பேசுகிறார் வழக்கறிஞர் மற்றும் நீதித்துறையும் அவமான படுத்தும் மன்சூரலிகான் எதிராக போராட வழக்கறிஞர் சமூகம் வழக்கறிஞரான நாம் போராட அணிதிரள்வோம்..
இவண் ஜெ.இராவணஜெயவர்த்தனா வழக்கறிஞர் பெரம்பலூர்
2. நடிகர் மன்சூரலிகான் ஒரு திரைப்படம் சரக்கு என்ற பெயரில் எடுத்துள்ளார்.
அந்த ” சரக்கு” என்ற சொல்லில் வழக்கறிஞர் காலரின் அடையாளமும், நீதித்துறையை குறிக்கும் வண்ணம் தராசு வடிவமும், ஒரு மதுபாட்டில் அந்த தராசை தாங்கி பிடிக்கும் நடுமையமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது…
இது சர்வ நிச்சயமாக நீதித்துறையையும், வழக்கறிஞர்களையும் அவமானப்படுத்துவதாகவும் புண்படுத்துவதாகவும் உள்ளது.
இது வழக்கறிஞர் தொழிலின் பெருமையையும் நீதித்துறையின் மாண்பினையும் கெடுக்கும் வண்ணமுள்ளது…
சற்று நேரத்திற்கு முன் நடிகர் மன்சூரலிகானுக்கு தொலைபேசியில் அழைத்த போது, தனக்கு தெரியாது என பதில் சொல்லும் துணிவின்றி தொலைபேசியை துண்டித்தார்.
பார்கவுன்சில் மற்றும் உயர்நீதிமன்ற பதிவாளர்களின் கவனத்திற்கு இந்த போஸ்டர் கொண்டு செல்ல படுகிறது.
பார்கவுன்சில் விரைவில் அந்த நடிகர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை தொடங்கும்..
இதை கவனத்திற்கு கொண்டு வந்த Saran Boom அவர்களுக்கும் மவச வாட்சப் குழுவில் தெரிவித்த வழக்கறிஞர் தோழருக்கும் நன்றி.
சட்டத்துறையையும் நீதித்துறையையும் இழிவு செய்வதை எதிர்த்தை வழக்கறிஞர்கள் அவரிடம் நியாயம் கேட்போம் . எ
வழக்கறிஞர்களுக்கான வாட்சப் குழுக்களிலும் பகிர்வோம். எதிர்ப்பை பதிவோம்.
-பா. அசோக்