ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு நடிக்கும் ‘சிஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு தீவிரம்!

ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர், காமெடி படம் ‘சிஸ்டர்.’

இந்த படத்தில் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் ரா.சவரி முத்து, வித்தியாசமான களத்தில் கலக்கலான காமெடியுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமான படைப்பாக இந்த படத்தை உருவாக்கி வருகிறார்.

மருத்துவமனையில் நர்ஸாக வேலைபார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான காமெடியுடன், பரப்பரப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் படத்தின் மோஷன் போஸ்டரை சமூக வலைதளத்தில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார், இயக்குநர் அருண் ராஜா காமராஜ், இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் இன்று வெளியிட்டனர். போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது,

பெரும் பொருட்செலவில், அனைத்து வயதினரும் ரசிக்கும்படியான பொழுது போக்கு திரைப்படமாக, Dwarka Productions சார்பில், பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

படக்குழு:
ஒளிப்பதிவு: தமிழ் ஏ அழகன்
இசை: டி இமான்
படத்தொகுப்பு: சரத்குமார்
கலை: சுரேஷ் கல்லேரி
சண்டை: சுகன்
நடனம்: ஷெரிப்
ஒப்பனை: சுரேஷ்
ஆடை வடிவமைப்பு: ஷேர் அலி
உடைகள்: ரமேஷ்
புகைப்படம்: அன்பு
நிர்வாக தயாரிப்பு: நிதின் கண்ணன்
தயாரிப்பு மேற்பார்வை: அழகர் குமரவேல்
விளம்பர வடிவமைப்பு: சபா டிசைன்ஸ்
மக்கள் தொடர்பு: AIM சதீஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here