விஜயகாந்த் மறைவால், ரீ ரிலீஸுக்கு தயாராகும் மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ திரைப்படம்!

மன்சூர் அலிகானுடன் ஏராளமான நடிகர்கள் நடிகைகள் இணைந்து நடித்த, நகைச்சுவையுடன் கூடிய மதுவின் கேடுகளை எடுத்துச் சொல்லும் படம் ‘சரக்கு.’

இந்த படம் வெளியான அன்று கேப்டன் விஜயகாந்த் இறந்து விட்டதால் மக்கள் அனைவரும் தொலைக்காட்சியின் முன்பு இருந்து விட்டனர். அதனால் படக்குழு படத்தை நிறுத்தி விட்டனர்.

இப்போது படத்தை உரிய நேரம் பார்த்து ரீ ரிலீஸ் செய்ய உள்ளார்கள். மன்சூர் அலிகான், யோகிபாபு, கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், கே.எஸ்.ரவிகுமார், பாக்யராஜ் என அனைவரின் நடிப்பும் சிறந்த முறையில் வரவேற்பு பெற்றதால், வெளிநாடு உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் படத்தை வெளியிட திட்டமிடுகிறது படக்குழு!

விரைவில் ரிலீஸ் தேதி தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here