ஆரம்பத்திலிருந்து இறுதிவரை திரில்லராக இருக்க வேண்டும் என்று நினைத்து உருவாக்கிய படம் இது! – ‘சத்தமின்றி முத்தம் தா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ராஜ் தேவ் பேச்சு

ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ் நடிப்பில், ராஜ் தேவ் இயக்கியுள்ள மாறுபட்ட சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படம் ‘சத்தமின்றி முத்தம் தா.’

இந்த படம் வரும் மார்ச் 1-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் இயக்குநர் ராஜ்தேவ் பேசும்போது, “ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லராக இருக்க வேண்டும் என்று நினைத்து உருவாக்கிய படம் இது. இந்த படத்திற்காக நடிகர்களைத் தேர்வு செய்யும்போது இது போன்ற கதைகள் கொண்ட படங்களில் நடிக்காதவர்களைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

அப்படித்தான் ஶ்ரீகாந்த் சாரை சந்தித்து இந்த படத்தைப் பற்றிப் பேசினேன். அனைத்து நடிகர்களையும் அப்படித்தான் தேர்வு செய்தேன். படத்தில் ஸ்ரீகாந்தின் உழைப்பும், அர்ப்பணிப்பும் மிகப் பெரியது. அவர் படத்திற்காக நிறைய உழைத்துள்ளார்.

கதாநாயகியும் ஹீரோவுக்கு நிகராக சிறப்பாக நடித்துக் கொடுத்தார். இசையமைப்பாளரும் நானும் நிறைய டிஸ்கஸ் செய்தோம். படத்தில் பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளது. இப்படத்தின் டிரெய்லரில் சத்தம் அதிகமாக இருப்பது போல் தெரிந்தாலும் இது தலைப்புக்கேற்ற படமாகத்தான் இருக்கும். உங்களுக்கு இத்திரைப்படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். படம் கண்டிப்பாக உங்களை இருக்கை நுனியில் அமர வைக்கும். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த படமாக இருக்கும்” என்றார்.

இந்நிகழ்வில் நாயகி பிரியங்கா திம்மேஷ் பேசும்போது, “இயக்குநர் என்னிடம் இந்த படத்தின் கதை சொல்லும்போது எனக்கு மிகவும் பிடித்தது. அப்போது படத்திற்குத் தேவையான உழைப்பைக் கண்டிப்பாகக் கொடுப்பேன் என்று சொன்னேன். சொன்னதைச் செய்துள்ளேன்.

நான் இப்போது தமிழ் கற்று வருகிறேன். தமிழ் கற்றுக் கொண்டு தமிழில் நிறையப் படங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை. இந்தப் படம் எனக்கு இதுவரை நடித்த படங்களிலிருந்து வித்தியாசமானதாக இருந்தது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

படக்குழு:
தயாரிப்பு: கார்த்திகேயன் எஸ்
தயாரிப்பு மேற்பார்வை: ஏ ஜெ பி ஆனந்த்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ராஜ் தேவ்
ஒளிப்பதிவு: யுவராஜ் எம்
இசை: ஜுபின்
படத்தொகுப்பு: மதன் ஜி
நடன இயக்கம்: தினேஷ்
சண்டை இயக்கம்: ‘மிராக்கிள்’ மைக்கேல் பாடகர்கள்: ஆண்ட்ரியா, எம் எம்.மானசி, ஜித்தின் ராஜ், ரவி.ஜி
மக்கள் தொடர்பு: மணவை புவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here