ஹைபர் லிங்க் நான் லினியராக,11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘சிறகன்.’
‘மேட் (MAD) பிலிம்ஸ்’ துர்கா பேட்ரிக் தயாரித்துள்ள இந்த படத்தில் கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் ஜி டி, ஹர்ஷிதா ராம், பாலாஜி, மாலிக், பூவேந்தன், ரயில் ரவி, சானு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார் வெங்கடேஷ்வராஜ். இவர் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாஸ்டர் இன் பிலிம் அண்ட் எலக்ட்ரானிக் மீடியா ஸ்டடிஸ் துறையில் பட்டம் பெற்றவர்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”மற்ற கிரைம் திரில்லர் படங்களை விட இதை ஒரே இரவில் நடக்கும் ஒரு ஏதார்த்தமான கிரைம் திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறோம்.
பஞ்சன் சிறகன் எனும் வகையை சார்ந்த பட்டாம்பூச்சியின் இடது புறம் வெள்ளை மற்றும் கருப்பு நிறமும், வலது புறம் காக்கி நிறமும் இருக்கும் அதற்கும் இந்த படத்தின் திரைக்கதைக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை இருப்பதாலும், இந்தவகை பட்டாம்பூச்சியின் வாழ்க்கை எப்படி ஒரே நாளில் துவங்கி ஒரே நாளில் முடிகிறதோ அதே போல் இந்த படத்தின் திரைக்கதையும் ஒரே இரவில் நடந்து முடிவதால் சிறகன் என்று பெயர் வைத்தோம்.
ஹைபர் லிங்க் நான் லினியர் முறையில் கிரைம் திரில்லர் ஜானரில் 11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுதான்.
இந்த படத்தில் பணியாற்றியுள்ள இயக்குனர் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் 27 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு முழுவதும் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்றது” என்றார்.
சமீப காலமாக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களை வெளியிட்டு வரும் உத்ரா புரொடக்சன்ஸ் ஹரி உத்ரா இந்த படத்தை வரும் ஏப்ரல் 20-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
படக்குழு:
ஒளிப்பதிவு: சேட்டை சிக்கந்தர்
இசை: ராம் கணேஷ்.கே
பாடல்கள்: வெட்டி பையன் வெங்கட், சந்தோஷ் ஆறுமுகம்
கலை: ஹரிபிரசாத் பால்
சவுண்ட் மிக்ஸிங்: கூழாங்கல் படத்திற்கு சிறந்த சவுண்ட் எபெக்ட்ஸ் விருது பெற்ற ஹரிபிரசாத்
மக்கள் தொடர்பு: மணவை புவன்