நடிகர் உதய் தீப் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘சாவு வீடு’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆண்டன் அஜித் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆதேஷ் பாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து இம்மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடித்திருக்கும் நடிகர்களின் புகைப்படங்களை இறந்தவர்களின் வீட்டில் சடலத்திற்கான அலங்காரத்துடன் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதால்.. ரசிகர்களின் கவனத்தை எளிதாக கவர்ந்திருக்கிறது.
பூபதி வெங்கடாசலம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ட்யூனர்ஸ் இசையமைத்திருக்கிறார். துக்கம் நிகழ்ந்த வீட்டின் பின்னணியில் அவல நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆண்டன் அஜித் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை ஷிவானி ஸ்டுடியோஸ் வழங்குகிறது.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை வென்ற உதய் தீப் இன்று கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்து வரும் படம் இது.

