விதிமுறைகளை மீறி லட்சியத்தை தொடரும் அச்சமற்ற ஒருவனின் கதையாக ஜேசன் சஞ்சய் இயக்கும் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் திரைப்படம் ’சிக்மா’ படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டியது!

ஜேசன் சஞ்சய் இயக்கும் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படம் ’சிக்மா’ 65 நாட்களுக்கான படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்தப் படத்தை சுபாஷ்கரனின் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது . நான்கு மாதங்கள் திட்டமிடப்பட்ட இந்தப் படத்தின் 95% ஷெட்யூல் நிறைவடைந்துள்ளது.

தமிழ், தெலுங்கு உட்பட பன்மொழி படமாக உருவாகும் ’சிக்மா’ சென்னை, சேலம், தலகோனா மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. லைவ் லொகேஷன் மற்றும் கதையின் சாகசத்திற்கு ஏற்ற சிறப்பு செட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

சமூக விதிமுறைகளை மீறி லட்சியத்துடன் தன் இலக்குகளைத் தொடரும் அச்சமற்ற ஒருவனின் கதையைச் சொல்வதுதான் ‘சிக்மா’ திரைப்படம். இந்த திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் கலவையாக இருக்கும்.

நடிகர் சந்தீப் கிஷனை இந்தத் திரைப்படத்தில் முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக பார்க்கலாம். மொழி எல்லைகள் கடந்து ரசிகர்கள் மத்தியில் பான் இந்திய ஸ்டாராக இதன் மூலம் மாற இருக்கிறார் சந்தீப். அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜபே, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

’சிக்மா’ பட இயக்குநர் ஜேசன் சஞ்சய் பகிர்ந்து கொண்டதாவது, “’சிக்மா’ என்ற டைட்டில் பயமில்லாத, சுதந்திரமான, சமூகத்தால் முழுமையாக புரிந்து கொள்ள படாத ஒருவன் தன் இலக்குகளை நோக்கி நகர்வதை இந்தப் படம் பேசும். வேட்டை, கொள்ளை, காமெடி என இந்தப் படம் பரபரப்பான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும். தமனின் துடிப்பான இசையும் சந்தீப் கிஷனின் திறமையான நடிப்பும் லைகா புரொடக்‌ஷன்ஸின் பிரம்மாண்டமான தயாரிப்பும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத படமாக மாற்றும். இவர்களின் திறமை மற்றும் ஆதரவால்தான் குறிப்பிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பு முடிப்பது சாத்தியமானது. ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அது முடித்த பின்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி விடும். என்றார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி, தமிழ் குமரன் பகிர்ந்திருப்பதாவது, “இயக்குநர் ஜேசன் சஞ்சய் எங்களிடம் சொன்ன கதையை அப்படியே படமாக்கியிருக்கிறார். திரைக்கதையை திட்டமிட்டபடி, சொன்ன நேரத்திற்குள் படமாக்குவது அவரை முழுமையான இயக்குநராக மாற்றியிருக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் பட்ஜெட்டிற்குள்ளும் படமாக்குவதுதான் எந்தவொரு தயாரிப்பு நிறுவனத்தின் கனவு. திறமையான நடிகர்களுடன் 65 நாட்களில் 95% படப்பிடிப்பை முடிப்பது என்பது நிச்சயம் புதுமுக இயக்குநராக ஜேசன் சஞ்சயின் சாதனை. லைகா நிறுவனத்தில் ஜேசன் சஞ்சயை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். அவரது எதிர்காலத்திற்கும் வாழ்த்துகிறோம்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here