கிரைம் திரில்லர் சப்ஜெக்டில் சூரியன்.ஜி இயக்கியுள்ள ‘டெக்ஸ்டர்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாகவிருக்கிறது.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனான பிறகு ஒவ்வொருவரையும் தேடிப் கண்டுப்பிடித்து கொலை செய்யும் ஒரு சைக்கோவின் பிடியில் அப்பாவியான யாமினி, புவி என இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். அவனிடமிருந்து இருவரையும் கதாநாயகன் ஆதி காப்பாற்றினாரா? இல்லை மற்ற கொலைகள் போல இவர்களையும் கொடுரமாக அந்த சைக்கோ கொலை செய்தானா? என்பதை திகிலுடன் சமீபத்தில் வந்த ராட்சசன், போர் தொழில் படங்களின் வரிசையில் விறுவிறுப்பான திரைக்கதையில் சஸ்பென்ஸ் திரில்லராக மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
படத்தில் ராஜீவ் கோவிந்த், அபிஷேக் ஜார்ஜ் ஆகியோர் கதாநாயகன்களாக நடிக்க யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
வில்லன்களாக ஹரிஷ் பெரடி நடிக்க, அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி,சினேகல், ஆதித்யன் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளும் ‘யாரோ யாரிவனோ காதல் பூக்கும் கானகனோ’ என்ற மனதை வருடும் பாடலும், ‘மிளிரும் பின்னாலி சுழலும் விழிகாரி…எனும் துள்ளலிசை பாடலும் இடம்பெற்றுள்ளன.
படப்பிடிப்பு குடகு மலை, கே ஜி எஃப், ஓசூர், வயநாடு உள்ளிட்ட இடங்களில் 45 நாட்களில் இரு கட்டமாக நடந்து முடிந்துள்ளது. படத்தை வரும் பிப்ரவரியில் வெளியிட திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளில் படக்குழுவினர் பரபரப்பாக ஈடுபட்டுள்ளனர்.
ராம் எண்டர்டைனர்ஸ் சார்பில் பிரகாஷ் எஸ் வி தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாரித்துள்ளார்.
படக்குழு:-
கதை – சிவம்
திரைக்கதை, வசனம், இயக்கம் – சூரியன் ஜி
ஒளிப்பதிவு –ஆதித்ய கோவிந்தராஜ்
இசை – ஸ்ரீநாத் விஜய்
பாடல்கள்- மோகன்ராஜன்
படத்தொகுப்பு – ஸ்ரீனிவாஸ் பி.பாபு
சண்டைப் பயிற்சி – அஷ்ரப் குருக்கள், கே.டி வெங்கடேஷ்
நடனம் – சினேகா அசோக்
எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர்ஸ் –
ஷார்வாக் வி என், ஹர்ஷா என்
மக்கள் தொடர்பு – வெங்கட்