தேசிய அளவிலான இளைஞர்களின் கனவு நாயகியான ராஷ்மிகா மந்தனா முக்கியப் பாத்திரத்தில் நடிக்க, திறமைமிகு இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கும் படம் ‘தி கேர்ள்ஃபிரண்ட்.’
பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. அது, ‘படம் அனைத்து வயதினரும் கொண்டாடும் ஒரு அழகான சினிமா அனுபவமாக இருக்கும்’ என்று உறுதியளிக்கிறது.
தனது காதலியிடம் எதிர்பார்க்கும் உரையாடல்களை அழுத்தமாக கொண்டிருக்கும் இந்த அழுத்தமான படைப்பில் ரசிகர்களை அசத்தவுள்ளார் ராஷ்மிகா. இதில் அவரது தோற்றம் அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது.
இந்த படத்தை வித்தியாசமான கதைக்களத்தில் மீண்டும் மீண்டும் பல வெற்றிப் படைப்புகளை தந்து வரும் கீதா ஆர்ட்ஸ், புதிய பிளாக்பஸ்டர் தயாரிப்பு நிறுவனமான மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
உருவாக்கத்தில் உறுதுணை:-
எழுத்து – இயக்கம் – ராகுல் ரவீந்திரன்
வழங்குபவர் – அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்கள் – வித்யா கோப்பினீடி, தீரஜ் மொகிலினேனி
இசை – ஹேஷாம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த்
தயாரிப்பு வடிவமைப்பு – S. ராமகிருஷ்ணா & மோனிகா நிகோத்ரே
ஆடைகள் – ஷ்ரவ்யா வர்மா
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஃபர்ஸ்ட் ஷோ