பாடலை வெளியிட்டு, படத்தின் ரிலீஸ் வரை பாடல் காட்சியை நிறுத்தி வைத்த ‘டைகர் 3′ படக்குழு. காரணம் என்ன?

சல்மான் கான் நடித்து, வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவிருக்கும் படம் ‘டைகர் 3.’ இந்த படத்தின் ‘உயிர் உலா உலா’ என தொடங்கும் 2-வது பாடலை படத்தின் ரிலீஸ் வரை வெளியிடாமல் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளார்கள்.

சல்மான் கான், கத்ரீனா கைப் இருவருமே தங்களது பெருமைமிகு கதாபாத்திரங்களான டைகர் மற்றும் சோயா என்கிற சூப்பர் உளவாளிகளாக இந்த ‘டைகர் 3’ என்கிற மூன்றாம் பாகத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதற்காக யஷ்ராஜ் பிலிம்ஸ் எப்போதுமே தங்களது ஸ்பை யுனிவர்ஸ் வரிசை படங்களின் ரகசியங்களை காப்பதில் உறுதியாக இருந்து வருகிறது. அந்த வகையில் படத்தின் கதையிலிருக்கும் முக்கிய திருப்பம் வெளியாகாமல் தடுப்பதற்காகவே அந்த பாடலை நிறுத்தி வைத்துள்ளார்கள்.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் மனீஷ் சர்மாவிடம் கேட்டால், ‘‘இந்தப்படத்தில் டைகரும் சோயாவும் மிகமிக பர்சலான மற்றும் தீவிரமான பயணத்தை மேற்கொள்கிறார்கள். அதைத்தான் ‘உயிர் உலா உலா’ பாடல் விவரிக்கிறது. இந்தப் படத்தில் அந்த பாடல் படமாக்கப்பட்டுள்ள விதம், சினிமாவாக பார்க்கும் அந்த தருணத்தின்போது புதிய அனுபவமாக இருக்கும். சல்மான் கானை வைத்து படமாக்கப்பட்ட படத்தின் ஆன்மாவான பாடல் இது என்பதால் அந்த பாடலை நிறுத்திவைக்கும் முடிவை எடுத்திருக்கிறோம். இது உண்மையிலேயே கடினமாகத்தான் இருக்கிறது.

ஆனால், இறுதியில் ‘உயிர் உலா உலா’ பாடலை கதையின் சூழலுடன் நீங்கள் கேட்கும்போது நாங்கள் சரியான விஷயத்தை தான் செய்தோம் என்பது உங்களுக்கு தெரியவரும். ‘டைகர் 3’ படம் வெளியாகும் நாளில் ரசிகர்கள் உற்சாகமாவார்கள்” என்றார்.

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களின் சினிமா வரிசையில் இது 5-வது படம். ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார் மற்றும் பதான் என இதற்கு முந்தைய நான்கு படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘உயிர் உலா உலா’ பாடலின் ஆடியோவாக கேட்க லிங்க் இதோ:-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here