கலைஞர் தொலைக்காட்சியில் வரும் நவம்பர் 26-ம் தேதியிலிருந்து ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு தமிழோடு விளையாடு என்கிற புத்தம் புதிய நிகழ்ச்சி இடம்பெறவிருக்கிறது.
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்று அசத்தவிருக்கின்றனர். முழுக்க முழுக்க தமிழில், தமிழை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பான வித்தியாசமான சுற்றுகள், அறிவை வளர்க்கும் கேள்விகள் என உணர்ச்சிப்பூர்வமாக உருவாகியிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில், போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்கும் மாணவர்களின் திறமைகளையும், தமிழின் பெருமையையும் கண்டு ரசிக்கலாம்.