மிஷ்கின் இயக்கத்தில் முதல்முறையாக விஜய் சேதுபதி! துவங்கியது ஷூட்டிங்.

சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் ட்ரெயின் திரைப்படத்தில் கைகோர்த்துள்ளார்.

இந்த படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி   படங்களை கொடுத்த பிரமாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார்.

இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது, எனவே ட்ரெயின் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார், மேலும் அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார்.டிம்பிள் ஹயாதி அழுத்தமான  கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .
இப்படத்தில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள் .
தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை வி.மாயபாண்டி மேற்கொள்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் திரு முரளி ராமசாமி, திரு ராதாகிருஷ்ணன், S கதிரேசன், தயாரிப்பாளர் அண்புச்செழியன், கல்யாணம் (Knack Studios) ஆகியோர் கலந்து கொண்டனர்.
படக்குழு:
இயக்கம் மற்றும் இசை: மிஷ்கின்
தயாரிப்பாளர்:  ‘கலைப்புலி’ எஸ் தாணு
நிர்வாக தயாரிப்பு  : எல்.வி.ஸ்ரீகாந்த்
ஒளிப்பதிவு: பௌசியா பாத்திமா
படத் தொகுப்பு: ஸ்ரீவத்சன்
கலை இயக்குனர்: வி.மாயபாண்டி
ஆடை வடிவமைப்பாளர்: ஷைமா அஸ்லாம்
படங்கள்: ஜெ.ஹரிசங்கர்
ஒலி வடிவமைப்பாளர்: ஜெஸ்வின் மேத்யூ
நிர்வாக தயாரிப்பாளர்: ஆர். உதயகுமார்
 தயாரிப்பு நிறுவனம்: வி கிரியேஷன்ஸ்
மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத், Team AIM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here