இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரும், ‘டமால் டுமீல்’ படத்தின் இயக்குநருமான ஸ்ரீ, அவரது நண்பர் எஸ்.ஆர்.ஜெ. இருவரும் இணைந்து ஜெயந்தி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கும் படம் ‘தீதும் சூதும்.’
நாம் தேர்வு செய்யும் காதல் நம் எதிர்காலத்தை எப்படி முடிவு செய்யும் என்பது கதையின் கரு. படத்தை ஜித்தா மோகன் இயக்கியிருக்கிறார்.
கதைநாயகன் சிவா, நாயகி ஜெஸ்ஸியை உயிருக்கு உயிராய் காதலிக்கிறான். நாயகி தந்தை லாரன்ஸ் சதித் திட்டத்தால் அவர்களின் காதல் பிரிகிறது. சிவா காதலியை அடைய கிரிமினல் உமரோடு கைகோர்த்து திட்டம் போடுகிறான். உமர் சிவாவை பயன்படுத்தி வேறு திட்டம் போடுவதால் ஜெஸ்ஸி உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இந்த மூன்று பேரும் அறியாத இன்னொரு நபரின் திட்டத்தில் சிக்கிய இவர்கள் தப்பித்தார்களா? பின்னர் நடந்தது என்ன? என்பது திரைக்கதை.
கதையின் நாயகன் சிவாவாக ஸ்ரீ. நாயகி ஜெஸ்ஸியாக அங்கனா ஆர்யா. அப்பா லாரன்ஸ் கதாபாத்திரத்தில் அவினாஷ், உமர் கதாபாத்திரத்தில் ஸ்ரீனிவாசன், கிருபா, பேபி தாக்ஷிகா, கிரி, கவிதா ராதேஷ்யாம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இந்த படம் வரும் டிசம்பர் 15-ம் தேதி வெளியாகிறது.
படக்குழு:-
திரைக்கதை, வசனம்: ஸ்ரீ
இணை தயாரிப்பாளர்கள்: ஜெயந்தி. பா, மணிகண்டன். பா, பாலாஜி.பா
ஒளிப்பதிவு: பராந்தகன்.இ (ஒளிப்பதிவாளர் செழியனின் உதவியாளர்.)
இசை: பிரணவ் கிரிதரன்
படதொகுப்பு: புவனேஷ் மணிவண்ணன்
சண்டைப் பயிற்சி: ஜி
நடனம்: லலிதா ஷோபி
கலை: எஸ். எஸ். சுசீ தேவராஜ்
பாடல்கள்: ஜெ, மனோஜ் பிரபாகர். எம்
மக்கள் தொடர்பு: சி.என்.குமார்