இயக்குநர் வ.கௌதமன் உள்ளிட்ட திரையுலக ஆளுமைகள் படம் பார்த்து பாராட்டு… இலங்கைத் தமிழர்கள் உருவாக்கிய ‘தீப்பந்தம்’ படத்தின் சிறப்புத் திரையிடலில் உற்சாகம்! 

இலங்கை தமிழர்கள் பற்றி இதுவரை எத்தனையோ திரைப்படங்கள் வந்துள்ளன. அவற்றிலிருந்து, கையாண்டிருக்கும் விஷயத்தால் வித்தியாசப்படுகிறது இலங்கை தமிழர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் ‘தீப்பந்தம்’ திரைப்படம்.

ராஜ் சிவராஜ் இயக்கத்தில், தமிழருவி சிவகுமார், ஏழுமலைப்பிள்ளை
மதிசுதா, கில்மன், கஜன் தாஸ், ஆகாஷ், நஜாத்.கே, எல்,பிரகாஷ், கஜன் விஜயநாதன், கதிர்சினி, சபேசன், ஆர்.கே.கஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த மே 31-ம் தேதி இலங்கை முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதையடுத்து, இந்த படம் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் தமித் திரையுலகப் பிரமுகர்கள், பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்காக திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் வ.கௌதமன், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், ஓவியர் மருது, ஓவியர் புகழேந்தி, இயக்குநர்கள் கவிதா பாரதி, ராசி அழகப்பன், நடிகர் முத்துக்காளை, இயக்குநர்கள் கேந்திரன் முனியசாமி,
அஜயன் பாலா, மாணவர்கள் நகலகம் சவுரி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, படத்தைப் பார்த்து தங்கள் கருத்துக்களை குறிப்பிட்டு படக்குழுவினரை பாராட்டிப் பேசினார்கள்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜ்சிவராஜ், ”ஐம்பதுகளில் பிறந்த ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. அவர் வாழ்க்கை வழியாக தமிழர் உரிமைப் போராட்டங்கள், செயல்பாடுகள் ஆகியனவற்றையும் அதற்கான மூல காரணங்களையும் வெளிப்படுத்தும் வண்ணம் திரைக்கதை அமைத்து, ஓர் உணர்வுப்பூர்வமான வாழ்வை ஆவணப்படுத்தியுள்ளோம். அதை திரைப்படங்களுக்கே உரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து கொடுத்திருக்கிறோம். பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த படம் ஒவ்வொரு வகையில் நெருக்கம் கொடுக்கும் படைப்பாக இருக்கும். பாருங்கள்” என்றார்.

‘அம்லுஸ் புரொடக்சன்ஸ்’ தயாரித்துள்ள இந்த படத்தை, ‘ப்ளக்போர்ட் இன்டர்நேசனல்’ நிறுவனம் வழங்குகிறது.

படக்குழு:-

கதை, இசை -பூவன் மதீசன்

திரைக்கதை – ராஜ் சிவராஜ், பூவன் மதீசன், அருண் யோகதாசன்

ஒளிப்பதிவு – ஏ.கே.கமல்

பாடல்கள் – வேலணையூர் சுரேஷ், கே.எஸ்.சாந்தகுமார், பூவன் மதீசன், அருண் யோகதாசன்

படத்தொகுப்பு – அருண் யோகதாசந்

கலை இயக்கம் – வி.எஸ்.சிந்து

மக்கள் தொடர்பு பணிகள் – கோவிந்தராஜ்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here