இயல்பான நடிப்பு, கெத்து காட்டும் குரல்… கொட்டாச்சியின் ‘கழுமரம்’ படத்தில் வில்லனாக அசத்தும் தமிழ் பாரதிக்கு குவியும் பாராட்டு!

‘இந்த படைப்பு அவார்டு வாங்கவோ, விருதுகள் வாங்கவோ அல்ல. அடுத்த கட்டத்திற்கு எங்களை அழைத்துச் செல்லவும், தங்கள் மனதில் நாங்கள் அவார்டு வாங்கவும்தான்’ என்ற எண்ணத்தோடு, காமெடி நடிகராக அறியப்படுகிற கொட்டாச்சி இயக்கியிருக்கும் படம் ‘கழுமரம்.’

இந்த படத்தில் கத்தியின்றி, இரத்தமின்றி கதாநாயகனின் நிம்மதியைக் கெடுக்கும் வில்லனாக வெளுத்து வாங்கியிருக்கிறார் தமிழ் பாரதி.

படத்தில் அவரது நடிப்பு இயல்பாக இருப்பதோடு, குரலில் இருக்கும் கம்பீரம் ஏற்றிருக்கும் வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறது.

சின்னத்திரை தொடர்களின் இயக்குநராக இவர் பைரவி, கிருஷ்ணா காட்டேஜ், காத்து கருப்பு, என் தோழி என் காதலி என் மனைவி, அம்மு, கனா காணும் காலம், அஞ்சறைப்பெட்டி, சுவை தேடி, சூரிய புத்திரி என பல்வேறு தொடர்களில் பணியாற்றியுள்ளார். சின்னத்திரை இயக்குநர் சங்கத்தின் பொருளாளர் பொறுப்பிலும் தொடர்கிறார்.

அவரிடம், ‘நடிகரானது எப்படி?’ என கேட்டபோது, கழுமரம் படத்தின் இயக்குநர் கொட்டாச்சி அன்னமகன் என் நீண்டகால நண்பர்; சகோதரரை போன்றவர். அவரது படத்தில் நடிக்க சொன்னபோது, ‘நடிப்பெல்லாம் எனக்கு வராது’ என்றேன். ‘நீங்க நடிக்கவெல்லாம் வேணாம்; இப்ப எப்படி என்கிட்ட பேசறீங்களோ அப்படியே எதார்த்தமா செய்யுங்க, அது போதும்’ என்றார். அதன்படியே செய்துள்ளேன். பாராட்டுக்கள் குவிகிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here