நடிகர்கள் சசிகுமார், பரத் ,சிபிராஜ் வெளியிட்ட ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

நகுல் கதையின் நாயகனாக, புலனாய்வு செய்பவராக நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்.’

கேரளத்து வரவு ரேணு சௌந்தர் நாயகியாக நடிக்கிறார். எதிர்பாராத பாத்திரத்தில் இலங்கையிலிருந்து ஒரு நடிகர் நடிக்கிறார். சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், ஆண்டனி பிரகன், டேனி தயால், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தை பாலாஜி இயக்க, டீம் பி புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தின் டைட்டில் லுக்கை நடிகர்கள் சசிகுமார், பரத் ,சிபிராஜ் வெளியிட, அது பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.

ஒரு கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை மர்மமான முறையில் கொலை நடக்கிறது. கொலைகளுக்கிடையே உள்ள தொடர்ச்சியை யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. ஊரில் யாராவது அது பற்றிப் பேசும் போது மற்றவர்கள் அதை ஒரு கதை போல எண்ணி நம்பாமல் கடந்து போகிறார்கள். அப்படி ஒரு கொலை நடக்கும்போது அங்கே இளம்பாரி என்கிற இன்ஸ்பெக்டர் பணிக்கு வருகிறார். அவர் கொலைகளுக்கு பின்னே ஒளிந்துள்ள மர்மங்களைத் தேடிப் பிடிக்க முயற்சிக்கிறார். கொலைகளில் ஒளிந்துள்ள இருளைக் கண்டு அஞ்சாமல் புலனாய்வு என்கிற விளக்கைக் கொண்டு தீவிரமாகத் தேடுகிறார். அதன் மூலம் பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.

இப்படிப்பட்ட சஸ்பென்ஸ் திரில்லர் கதைகள் மொழி எல்லையைக் கடந்தவை என்பதால் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகிறது.

திறமையான இளைஞர்கள் இணைந்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெறவிருக்கிறது.

ஒளிப்பதிவு: D3 படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மணிகண்டன் பி.கே.
இசை: உடன்பால் படத்திற்கு இசையமைத்த சக்தி பாலாஜி
படத்தொகுப்பு: D3, லேபில் படங்களில் பணியாற்றிய ராஜா ஆறுமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here