சித்திரையின் தொடக்கத்தில் ‘திருக்குறள்’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளை ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திரைப்படமாகத் தயாரிக்கிறது.

படத்தை ஏ ஜெ பாலகிருஷ்ணன் இயக்குகிறார். காமராஜ் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனமெழுதிய செம்பூர்.கே.ஜெயராஜ் இந்த படத்திற்கான திரைக்கதை எழுதுகிறார்.

வள்ளுவராக – கலைச்சோழன் (கூத்துப்பட்டறை), வாசுகியாக – தனலட்சுமி, நக்கீரனாக – சுப்ரமணிய சிவா, பாண்டிய மன்னானாக – ஓ.ஏ. கே. சுந்தர், குமணனாக – அரவிந்த் ஆண்டவர், பெரும்சாத்தனாக – கொட்டாச்சி, இளங்குமணனாக – சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் இந்த படத்தினை சப் டைட்டிலோடு உலகெங்கும் திரையிடத் திட்டமிட்டுள்ளார்கள்.

ரமணா கம்யூனிகேஷன்ஸ் ஏற்கனவே கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டது. அந்த படம் தமிழக அரசின் சிறப்பு விருதினைப் பெற்றதோடு, காமராஜர் வரலாற்றுக்கான ஆவணமாகத் திகழ்கிறது. தவிர மகாத்மா காந்தியின் வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்பட்ட ‘வெல்கம் பேக் காந்தி’ என்ற படத்தையும் தயாரித்திருந்தது அதுவும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

அதையடுத்து தற்போது திருக்குறள் படத்தை தாயரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் பூஜையுடன் துவங்கியது.

படக்குழு:
ஒளிப்பதிவு: எட்வின் சகாய்
கலை: சுரேஷ் கலேரி
ஆடை வடிவமைப்பு: யாத்திசை புகழ் சுரேஷ் குமார்
மக்கள் தொடர்பு: மணவை புவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here